Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

pa ranjith vs lokesh kanagaraj பா.ரஞ்சித் Vs லோகேஷ் கனகராஜ் - இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?

UDHAYA KUMAR June 15, 2022 & 13:54 [IST]
pa ranjith vs lokesh kanagaraj  பா.ரஞ்சித் Vs லோகேஷ் கனகராஜ் - இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?Representative Image.

கலைஞர்களுக்குள் எப்போதும் சண்டை வரக்கூடாது. ஆரம்பத்தில் எம்ஜிஆர் Vs எம்.ஆர்.ராதா இடையேயான சண்டை தமிழ் திரையுலகில் எப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பின்னாளில் இருவரும் இணைந்து பல மேடைகளில் ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசிய நிகழ்வு கூட நடந்தது. 

இப்போது சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய போரே நடந்துவருகிறது. இதில் சம்பந்தப்பட்ட பெயர்களான பா. ரஞ்சித்துக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சொல்லப்போனால் இருவரும் தனிப்பட்ட முறையில் எத்தனை முறை சந்தித்தார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் பா.ரஞ்சித் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை விமர்சித்தார். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய அந்த வீடியோ, தற்போது வேண்டுமென்றே பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. காரணம் இது பா.ரஞ்சித் சினிமா துறைக்கு வந்த 10 ஆண்டு காலம் ஆனது. இதனை முன்னிட்டு அவரது திரைப்படங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் பலரும் பல நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பா.ரஞ்சித் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவரை கலங்கப்படுத்தும் விதத்தில் சண்டையை மூட்டி விட்டுள்ளனர். 

இதுவரை பா.ரஞ்சித் - லோகேஷ் கனகராஜ் என இருந்த சண்டை இப்போது கோயம்புத்தூர் Vs சென்னை என மாறியுள்ளது சண்டை. 

இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது பா.ரஞ்சித் தனது இரண்டாவது படத்தில் கார்த்தியை இயக்கியிருந்தார். லோகேஷ் கனகராஜும் தனது இரண்டாவது படத்தில் கார்த்தியை இயக்கியிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம்தான் அது. இரண்டு படங்களும் இருவரது மார்க்கெட்டை பெரிய அளவுக்கு உயர்த்தியது. 

இரண்டாவது படம் ஹிட் ஆனதும் இருவரும் பெரிய நடிகர்களுக்கு கதை கூறி படம் இயக்க ஒப்பந்தம் ஆனார்கள்.  லோகேஷ் கனகராஜ், கைதியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். பா. ரஞ்சித்தோ அவரின் மூன்றாவது படத்தை ரஜினியை வைத்து இயக்கினார். 

பா.ரஞ்சித் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். இப்போது நட்சத்திரம் நகர்கிறது, அடுத்து சீயான் 61, உலகநாயகன் 233 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். லோகேஷுக்கு அடுத்து தளபதி 67 கைவசம் இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்