Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

வடிவேலு இதற்கு தேவைப்படவில்லை..! - இயக்குநர் சுந்தர்.சி ஓபன் டாக்

Aruvi Updated:
வடிவேலு இதற்கு தேவைப்படவில்லை..! - இயக்குநர் சுந்தர்.சி ஓபன் டாக்Representative Image.

சென்னை: தலைநகரம் 2 படத்துக்கு வடிவேலுவின் காமெடி தேவைப்படவில்லை என்று இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா நகைச்சுவையில் தவிர்க்க முடியாதவர் வடிவேலு. அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை கடுமையாக இறக்கி வைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

வடிவேலு இதற்கு தேவைப்படவில்லை..! - இயக்குநர் சுந்தர்.சி ஓபன் டாக்Representative Image

ரீ என்ட்ரி வடிவேலு:

சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர்.

மாமன்னன் வடிவேலு:

இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார்.

வடிவேலு இதற்கு தேவைப்படவில்லை..! - இயக்குநர் சுந்தர்.சி ஓபன் டாக்Representative Image

மீண்டும் ஆட்டம்:

வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக செல்லவில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது. இதனையடுத்து வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என பலர் கூறினர். இருப்பினும் அவரது பழைய காமெடி காட்சிகள் இன்றுவரை பலராலும் ரசிக்கப்படுபவை.

காமெடியால் மட்டும் ஹிட் இல்லை:

வடிவேலு பீக்கில் இருந்த சமயம் பல படங்கள் அவரது காமெடியால்தான் ஓடின என்ற பேச்சு எழுந்தது உண்டு. உதாரணமாக வின்னர், தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை சிலர் கூறுவார்கள்.

இந்நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி வடிவேலு குறித்து பேசுகையில்,, “நகரம்’ என்ற படத்தை இயக்கினேன். அந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி இன்றளவும் பிரபலம். ஆனால் படத்தின் ஒட்டுமொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம்தான். ஆனால் காமெடி காட்சிகள் 45 நிமிடம் வரும்.

காமெடி காட்சிகள் நன்றாக இருந்ததால் மற்ற காட்சிகளை சுருக்க வேண்டியதாக ஆயிற்று. தலைநகரம் 2 படத்தில் காமெடி இருந்தா நல்லா இருக்காது. அதனால் வைக்கவில்லை” என்றார். தலைநகரம் 2 படத்தை முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கியிருக்கிறார், என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்