Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாபஞ் செய் யாதிரு மனமே! அறம் சார்ந்து வாழ நினைவூட்டும் அருமையான பாடல்!

Udhaya Kumar July 06, 2022 & 15:39 [IST]
பாபஞ் செய் யாதிரு மனமே! அறம் சார்ந்து வாழ நினைவூட்டும் அருமையான பாடல்!Representative Image.

பாபஞ் செய் யாதிரு மனமே – நாளைக்
கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளைகிறது. ஆகவே பாவம் செய்யாதிரு மனமே.நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். தீமை செய்தவர்களின் மரணம் எமனின் கோபத்தால் துயரம் மிகுந்ததாக இருக்கும். ஆகவே பாபஞ் செய்யாதிரு மனமே.

சாபம் கொடுத்திட லாமோ – விதி
தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ
கோபம் கொடுத்திட லாமோ – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ

தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது. விதியை நம்மால் தடுக்க முடியாது. கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது. பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.

பாபஞ் செய் யாதிரு மனமே – நாளைக்
கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்

சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் – எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம் 

பாபஞ் செய் யாதிரு மனமே 


நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே – கெட்ட
பொய்ம் மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே

நல்லோரை காண்பதும் நன்மையை தரும். ஆதலால் நல்லோரை விலக்க கூடாது.அறங்கள் நாலு எட்டு(12) நான்கு வேதங்கள் அவற்றின் பிரிவுகள் எட்டு மொத்தம் 12 அவற்றின் சாரம் அறம் செய்தல். அறம் செய்வதை தவிர்க்க கூடாது. தினமும் அறம் செய்ய வேண்டும். ஒருவரிடமும் பகைமை கொள்ளக் கூடாது. கெட்ட பொய் குறை கூறுதல் பொருந்த சொல்லுதல் கூடாது.


மெய்ஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு


இதுதான் உண்மையா? இதுதான் நானா? என இடைவிடாமல் ஆராய்சி செய்வதுதான் ஞான மார்க்கம். அந்த வழியில் செல். உன் உண்மை இயல்பை உணர்ந்து கொள். வெறுமை வெட்ட வெளி அதில் புகு. அஞ்ஞானமாகிய அறியாமையை விலக்கு. உண்மையை தேடி உன்னை தேடி செல் என நாடி வருபவர்களுக்கு சொல்.


நல்ல வழி தனை நாடு – எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

நல்ல வழியில் செல். பக்தி தியானம் பிறருக்கு உதவுதல். மரணம் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். மரணத்திற்கு தாக்கு பிடிக்காத எல்லாவற்றையும் உதறி தள்ளு. நித்தியமான உண்மையான அந்த இறைவனையே நாளும் தேடு. நல்லவர்களின் பேச்சைக் கேள். அவர்களுடன் நட்பு கொள். குருவையும் திருவையும் நெஞ்சில் வாழ்த்தி வணங்கு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்