Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அலப்பற தாங்க முடியலயே... பெரிய ஹீரோயினா வருவாங்கன்னு பாத்தா..... வாய்ப்பில்ல ராஜா!

UDHAYAKUMAR August 26, 2022 & 10:00 [IST]
அலப்பற தாங்க முடியலயே... பெரிய ஹீரோயினா வருவாங்கன்னு பாத்தா..... வாய்ப்பில்ல ராஜா!Representative Image.

பிரபல இயக்குநரின் மகளான கோலிவுட்டுக்கு வந்த புது ஹீரோயின், பார்க்க லட்சணமாகவும், ஓரளவுக்கு நடிப்புத் திறமையும், பாடும் திறமையும் கொண்டிருப்பதால், தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவார் என நம்பியிருந்தார்கள். 

பிரபல தம்பி நாயகன் ஜோடியாக அவர் நடித்து வெளியான படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், நாயகிக்கு நல்ல பெயர்தான் கிடைத்தது. அந்த படம் வெளியாவதற்குள்ளே அடுத்த படத்துக்கு சைன் போட்டு கமிட் ஆனவர், அடுத்தடுத்து பெரிய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஒப்பந்தம் ஆவார் என எதிர்பார்த்தனர். 

இந்நிலையில்தான், தன்னுடைய இமேஜை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் நடிகை. பிரபல கடி ஜோக் தொலைக்காட்சி நிகழ்ச்சி போல கடித்து கடித்து ரசிகர்களை ஓட வைக்கிறார் அவர். எந்த ஷோ போனாலும் அவரிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டு அவரை வைத்து காமெடி செய்கின்றனர். ரசிகர்களும் இது ஹீரோயின் மெட்டீரியல் இல்லை காமெடிக்கு தான் லாயக்கு என்பது போல பேசி வருகின்றனர். 

பெரிய இடத்து பொண்ணு வேற. பாத்து சூதானமா இருந்தாதான் மக்கள் மத்தியில இமேஜ் நிலைச்சிருக்கும். பாத்துக்கோங்க...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்