Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னி நதி பாடல் வரிகள்

UDHAYAKUMAR August 01, 2022 & 11:57 [IST]
பொன்னி நதி பாடல் வரிகள் Representative Image.

ஆண்: காவேரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

காவேரித்தாயின் நீர் மடிக்கும் ஆகாயம் போல விரைவாய்ச் சென்றான். அம்பரம் என்றால் ஆகாயம்.  

ஆண்: நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்

நீர் சத்தத்தைக் கேட்டு சோழ தேசத்து நெல்மணிகள் பூப்பூத்து குலுங்குமாம். உளி சத்தம் கேட்டதும் கற்கள் எல்லாம் சிலையாக வேண்டி காத்துக் கிடக்குமாம். 

ஆண்: பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமைகூற
சொல் பூத்து நிக்கும்

பகைவரின் சத்தம் கேட்டவுடன் வீரர்களின் கைகளில் விற்கள் நிரம்பிக் கிடக்குமாம். சோழ தேசத்தின் பெருமையைக் கூற இங்கே புலவர்களின் நாக்குகள் காத்துக்கிடக்குமாம். 
 
ஆண்: பொன்னி நதி பாக்கணுமே
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: பொழுதுக்குள்ள
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: கன்னி பெண்கள் காணணுமே
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: காற்றைப்போல
பெண்கள்: தீயரி எசமாரி

வந்தியத் தேவன் பாடுற மாதிரி இந்த பாட்டு அமைஞ்சிருக்கு. அதுல வந்தியத்தேவன் பொன்னி நதிய நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறான். சாயங்காலம் அடையறதுக்குள்ள நதிய பாக்கணும். ஒரு காற்றைப் போல அங்குள்ள பெண்கள் அனைவரையும் பார்த்துட்டே போகணும்னு ஆசைப்படுறான் வந்தியத் தேவன். 

ஆண்: பொட்டல் கடந்து
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: புழுதி கடந்து
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: தரிசு கடந்து
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: கரிசல் கடந்து
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு

வீராணம் ஏரியிலிருந்து பயணத்தைத் துவங்கும் வந்தியத் தேவன்,  பொட்டல் காடுகளையும் புழுதி மணல்களையும் தரிசு நிலங்களையும், கரிசல் காடுகளையும் கடந்து விரைந்து செல்கிறான். 


Representative Image. Ponniyin Selvan Review : மெய்சிலிர்க்க வைக்கும் சோழர்களின் பராக்கிரமம்..!  திரை விமர்சனம்


ஆண்: அந்தோ நான் இவ்வழகினிலே
பெண்கள்: ஆய்லே செம்பா செம்பா
ஆண்: காலம் மறந்ததென்ன

இவ்வளது தூரம் சோழ தேசத்த பாத்துட்டே வர்ற வந்தியத்தேவன் இந்த அழகுல கால நேரத்த மறந்து கண்குளிர பார்த்துட்டே இருக்கான். 

ஆண்: மண்ணே உன் மார்பில் கிடக்க
பெண்கள்: பச்சை நெரஞ்ச மண்ணு
ஆண்: அச்சோ ஓர் ஆசை முளைக்க
பெண்கள்: மஞ்சள் தூறும் மண்ணு
ஆண்: என் காலம் கனியதோ
பெண்கள்: கொக்கு பூத்த மண்ணு
ஆண்: என் கால்கள் தனியாதோ
பெண்கள்: வெள்ளை மனசு மண்ணு

இவ்வளவு அழகையும் சுமந்து நிக்குற மண்ணோட மார்புல கிடந்து எழுந்து போக ஆசைப்படுற வந்தியத்தேவனுக்கு அதுக்கான காலம் கணியனுமே என் கால்கள் விரைவாய் சென்று கொண்டிருக்கின்றன என் நண்பனின் உத்தரவின்படி நான் சென்று கொண்டிருக்கிறேன். என் வேலை எப்போது முடியும் என் கால்கள் எப்போது இம்மண்ணை மிதித்து ஓய்வெடுக்கும்

பசுமையான மங்களகரமான மண்ணு எப்போதும் விளைஞ்சி நிக்குற வயல்வெளிகள கொண்ட மண்ணு வெள்ளந்தி மனிதர்கள் வாழும் மண்ணு. 

ஆண்: செம்பனே
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
பெண்: ததட்தட ததட்தட
ததட்தட ததட்தட
ததட்தட தடவனே செல்
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண்: ஏ பொன்னி மகள்
பெண்கள்: தீயரி எசமாரி
பெண்: லாலி லல்ல
லாலி லல்ல
லாலி லல்ல
பாடி செல்லும்

ஆண்: வீர சோழபுரி
பார்த்து விரைவாய் நீ
பெண்கள்: தாவு அழகா
தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

ஆண்: பொன்னி நதி பாக்கணுமே
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: பொழுதுக்குள்ள
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: கன்னி பெண்கள் காணணுமே
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: காற்றைப்போல
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண்: செக்க சிகப்பி
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: நெஞ்சில் இருடி
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண்: ரெட்டை சூழச்சி
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: ஒட்டி இருடி
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண்: சோழ சிலைதான் இவளோ
பெண்கள்: செம்பா
ஆண்: சோள கருதாய் சிரிச்சா
பெண்கள்: செம்பா
ஆண்: ஈழ மின்னல் உன்னாலே
பெண்கள்: செம்பா
ஆண்: நானும் ரசிச்சிட ஆகாதா
பெண்கள்: செம்பா
ஆண்: கூடாதே
பெண்கள்: செம்பா

ஆண்: கடலுக்கேது ஓய்வு
பெண்கள்: செம்பா
ஆண்: கடமை இருக்குது எழுத்துரு
பெண்கள்: செம்பா
ஆண்: சீறி பாய்ந்துடு அம்பாக
பெண்கள்: செம்பா
ஆண்: கால தங்கம் போனாலே
பெண்கள்: செம்பா
ஆண்: தம்பியே எந்நாளும் வருமோடா

ஆண்: நஞ்சைகளே பூஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிக்கும் வஞ்சிக்களே
நஞ்சைகளே பூஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிக்கும் வஞ்சிக்களே

ஆண்: பொன்னி நதி பாக்கணுமே
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: பொழுதுக்குள்ள
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்: கன்னி பெண்கள் காணணுமே
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண்: காற்றைப்போல
பெண்கள்: தீயரி எசமாரி

ஆண்: செக்க செகப்பி
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண்: நெஞ்சில் இருடி
பெண்கள்: தீயரி எசமாரி
ஆண்:ரெட்டை சூழச்சி
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண்:ஒட்டி இருடி
பெண்கள்: தீயரி எசமாரி

ஆண்: அந்தோ நான் இவ்வழகினிலே
பெண்கள்: வீரம் வெளஞ்ச மண்ணு
ஆயிலே செம்பா செம்பா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்