Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sagara Sangamam கமல்ஹாசன் 68 : சலங்கை ஒலி

UDHAYA KUMAR November 03, 2022 & 16:14 [IST]
Sagara Sangamam கமல்ஹாசன் 68 : சலங்கை ஒலி Representative Image.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 100 நாட்கள் கடந்து ஓடிய ஒரே படம் சாகர சங்கமம். இதன் தமிழ் பதிப்பே சலங்கை ஒலி. கமல்ஹாசன், ஜெயபிரதா, எஸ்.பி. சைலஜா, சரத் பாபு உள்ளிட்டோர் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். பெங்களூரிலுள்ள பல்லவி திரையரங்கில் 511 நாட்கள் ஓடிய வரலாற்று சாதனை திரைப்படம் இதுவாகும். 

இந்தியாவின் தலைசிறந்த 100 படங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்த படம் இது. இந்த பட்டியலில் நிறைய படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் வந்ததாக இருந்தது. சிஎன்என் ஐபிஎன் இந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. 

பரதநாட்டியத்தை உயிராய் நினைக்கும் பாலு,  அதில் சிறந்த நாட்டியக் காரனாக வர வேண்டும் என்று முயற்சி செய்கிறான். விதியின் வசத்தால் அவனது கனவு நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகி சமூகம் ஏளனமாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி,  பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி

நடிகர்கள்

  • கமல்ஹாசன்
  • ஜெயபிரதா
  • சரத் பாபு
  • எஸ். பி. சைலஜா
  • சாஹ்சி ரங்க ராவ்
  • டப்பிங் ஜானகி
  • சக்ரி டொலெட்டி
  • மஞ்சு பார்கவி
  • கீதா

பாடல்கள் 

சமையல் வேலை செய்யும் பெண்ணின் மகனான நாயகனுக்கு ஆட்டம் மட்டுமே உலகம். அவனுக்கு தான் மிகப் பெரிய நடனக் கலைஞனாக வந்துவிட வேண்டும் என்கிற வெறி. அவனது அம்மாவுக்கும் அவனின் எண்ணம் நிச்சயம் ஈடேறும் அவன் மிகப் பெரிய நடன கலைஞனாக ஆகிவிடுவான் என நினைத்துக் கொண்டே தனது கஷ்டங்களை எல்லாம் மறந்து அன்றாடம் அவனை வளர்த்து வருகிறார்.

திருமண விழா ஒன்றுக்கு சென்ற தாயோடு நாயகனும் செல்கிறான். சமையல் வேலைகள் நடந்துகொண்டிருக்க, அங்கே ஆடல் நிகழ்ச்சியும் ஒருபுறம் நடந்தேறுகிறது. பிறவிக் கலைஞனான நாயகன் பாலு, தாய் முன் நடனமாடுகிறான். அதை தாயும், நாமும், பின்னாளில் காதலியாகவிருக்கும் நாயகியும் காண்கிறாள்.  

மாதவி.. புகைப்படமெடுக்கும் கலைஞராக எழுத்தாளராக அழகிய பெண்ணாக கண்முன் வந்து நிற்கிறாள்.   அவளுக்கு திருமணம் ஆகி மூன்று நாட்களில் பணப் பிரச்சனையில் கணவனிடமிருந்து பிரிந்து வந்தவள்.  பாலுவுக்கு போட்டோ பிடித்துக் கொடுத்து உதவி செய்கிறாள். அவனைப் பற்றிய ஆர்ட்டிகளை எழுதுகிறாள். எல்லாவற்றையும் தாண்டி அவனுக்கு டெல்லியில் ஆடுவதற்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தருகிறாள். அதற்கான இன்விடேஷனை அவனிடம் சர்ப்ரைஸாக தருகிறாள். எல்லாவற்றுக்கும் பூக்கள் பூக்கும் புன்னகையைக் சூடிக் கொண்டவள் அவள். அவன் பிரித்து பார்த்துக்கொண்டே வந்து இறுதியில் தன் பெயரும் இருப்பதை பார்த்து விட்டு என்ன செய்வதென்று புரியாத உணர்ச்சி வயப்பட்ட நிலையில்....அழுதபடி மாதவியின் கைகளில் நன்றிக்கடனாக முத்தமிடுகிறான். 

ஆனால் டெல்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலை பாலுவுக்கு. நடனக் கலைஞனாக தன் மகனை பார்க்க ஆசைப்பட்ட தாய் அந்த நிராசையோடே மண்ணை விட்டு விண்ணுக்கு பயணித்துவிட்டார்.  தன் தாயின் உடல் முன்பு பாலு ஆடும் ஆட்டம் நம் கண்களை குளமாக்கி உடலை வியர்க்க வைத்துவிடுகிறது. 

என்ன மனுசன்யா இந்தாளு.. நம்மை அறியாமலேயே கமல்ஹாசனை பாராட்டும் நம் மனது. 

அதற்கு அடுத்து ஒரு காட்சி. மாதவி பாலுவிடம் காதலைச் சொல்ல வந்துகொண்டிருக்கிறாள். ஆனால் அம்மாவை இழந்த துயரத்தில் ஆடும் பாலு, தன்னையே மறந்து, உலகையும் மறந்து விரக்தியில் ஆடுகிறான். நிற்காமல் ஆடி களைத்து போய் பாறையில் உட்கார்ந்துவிடுகிறான். இந்த முழுக் காட்சியும் கமல்ஹாசனை யார் என்று உலகுக்கே எடுத்து காட்டுகிறது. 

கமல்ஹாசனின் வாழ்க்கையைச் செதுக்கியவர்களில் மிக முக்கியமான இருவர் பாலச்சந்தரும் விஸ்வநாத்தும்தான். கே விஸ்வநாத் இந்த படத்தின் இயக்குநர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்