Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்பு பண்ண ரிஜக்ட்! கோடி ரூபாய் குடுத்தாலும் நோ நோ தான்...!

UDHAYAKUMAR August 16, 2022 & 11:58 [IST]
சிம்பு பண்ண ரிஜக்ட்! கோடி ரூபாய் குடுத்தாலும் நோ நோ தான்...!Representative Image.

சிம்பு நோ சொன்ன விசயம் குறித்துதான் இப்போது கோலிவுட்டில் பிக் டாக். காரணம் அவருக்கு கோடி ரூபாய்க்கு  சம்பளம் கொடுத்தும் அதை வேண்டாம் என மறுத்துள்ளார். கோடி ரூபாய் கொடுத்தாலும் சில விசயங்களை செய்யமாட்டேன் அதில் முதல் விசயம் இதுதான் என அயன் படத்தில் பிரபு பேசுவதாக ஒரு வசனம் வரும். அதைத் தான் இப்போது சிம்பு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுபான நிறுவனம் ஒன்று சிம்புவைத் தொடர்பு கொண்டு விளம்பர படம் ஒன்றில் நடிக்குமாறும் அதற்கு சில கோடிகள் சம்பளம் தருவதாகவும் கேட்டுள்ளனர். ஆனால் இதனை ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டாராம் சிம்பு. 

மதுபான விளம்பரங்களை டிவியில் ஒளிபரப்பக்கூடாது என்கிற சட்டம் தமிழகத்தில் இருக்கிறது என்றாலும், சோடா, தண்ணீர் பாட்டில் என விளம்பரம் செய்து பிராண்டை விளம்பரப்படுத்துகின்றனர். அந்த வகையில் சிம்புவுக்கு வலைவிரித்த நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொண்ட சிம்பு வேண்டவே வேண்டாம் என கூறிவிட்டாராம். 

அதே சமயம் மேற்கொண்டு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பேசி வருகிறதாம் அந்த நிறுவனம். ஒருவேளை இவர் மறுத்துவிட்டாலும் வேறு ஒரு முன்னணி நடிகரை அணுகவுள்ளனராம். அவரும் பெரிய பண கஷ்டத்தில் இருப்பதால், ஒப்புக்கொள்வார் என கூறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்