நவரச நாயகன் கார்த்திக்கை திருமணம் செய்ய விரும்பி, அவர் காதலை ஏற்காததால் நடிகை தற்கொலை செய்ய முயன்றாராம். இந்த கதையைக் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் பயில்வான். வாருங்கள் அது எந்த நடிகை, என்ன கதை என்பதை தெரிந்துகொள்வோம்
பாரதி ராஜா அறிமுகம் செய்த பல நடிகர்கள் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார்கள். அவரது இயக்கத்தில் நடித்த பல புதுமுக நடிகர்களுக்கும் இது பொருந்தும். கமல்ஹாசன், ரஜினிகாந்த் கூட இவரின் படத்தில் நடித்து புகழடைந்தவர்கள் பட்டியலில் உண்டு. அப்படி ஒருவர்தான் கார்த்திக். இவரை நவரச நாயகன் கார்த்திக் என்றும் அழைப்பதுண்டு.
ஜெமினி கணேசன், கமல்ஹாசன் போல கார்த்திக்கும் காதல் இளவரசனாக வலம் வந்தவர். இவரைப் பார்த்த அனைவரும் காதலில் விழுவார்கள். அப்படி ஒரு கரிஸ்மா இவருக்கு இருக்கும். ஆனால் இவர் பெரிதாக யாரையும் கண்டுகொள்ள மாட்டார். பிரபல நடிகைகள் கூட இவரின் மீது காதலில் விழுந்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீப்ரியாவும் இவரைக் காதலித்ததாக கூறியுள்ள பயில்வான், கார்த்திக்கை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், அதற்கு கார்த்திக் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் ஸ்ரீப்ரியா தற்கொலை முயற்சி வரை சென்றதாக பயில்வான் பேசியுள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் இது பத்திரிகைகளிலும் வந்ததாம். இப்படி அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியில் கூறப்பட்ட தகவல்கள் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள வீடியோவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டவையே அன்றி எங்கள் நிறுவன சொந்த கருத்து இல்லை. இதற்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்பவர்களாக முடியாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…