Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்! இதுமட்டும் நடந்துச்சுன்னா வேற லெவல் பாக்ஸ் ஆபிஸ்!

UDHAYA KUMAR June 08, 2022 & 20:01 [IST]
விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்! இதுமட்டும் நடந்துச்சுன்னா வேற லெவல் பாக்ஸ் ஆபிஸ்!Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய். இவரது ரசிகர்கள் இவரை அன்புடன் தளபதி என்று அழைக்கின்றனர். இவரது படங்கள் குறைந்த பட்சம் 100 கோடி வசூலையாவது பெற்றுவிடும். இவருடைய சம்பளமும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இவர் தற்போது நடித்துவரும் படத்தை தளபதி 66 என்று அழைக்கின்றனர். 

தளபதி 66 திரைப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. மிகப் பெரிய நடிகர் படையோடு கூடிய இந்த படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் இதன் இயக்குநர் வம்சி. தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த படத்தில் தனக்கான போர்சனை முடித்துக்கொண்டு விஜய் விடைபெறுவார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இன்னுமொரு சர்ப்ரைஸாக சூப்பர் ஸ்டார் ஒருவர் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. அநேகமாக  அது மகேஷ்பாபுவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

மகேஷ் பாபு மட்டும் விஜய் படத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸ் அள்ளும். ஏற்கனவே விக்ரம் படத்தில் முறியடிக்கப்பட்ட விஜய்யின் சாதனையை, மீண்டும் விஜய்யே முறியடிப்பார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்