Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய், அஜித் ரிஜக்ட் பண்ண படத்துல சூர்யா நடிச்சி படுபயங்கர ஹிட்! என்ன படம் தெரியுமா?

Udhaya Kumar July 04, 2022 & 19:07 [IST]
விஜய், அஜித் ரிஜக்ட் பண்ண படத்துல சூர்யா நடிச்சி படுபயங்கர ஹிட்! என்ன படம் தெரியுமா?Representative Image.

காக்க காக்க. கௌதம் மேனன் இயக்கத்துல சூர்யா, ஜோதிகா நடிச்சு ரெம்ப பரபரப்பா பேசப்பட்ட படம் காக்க காக்க. சூர்யாவுக்கு சூப்பரான பெயர் வாங்கி குடுத்த படம். அந்த படத்து மூலமாதான் கௌதம் மேனன் தமிழகத்துல பிரபலமே ஆனாரு. 

காக்க காக்க படம் முதல்ல எழுதுனதும் உடனே அதுல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்னு கௌதம் மேனன் நினச்சிருக்காரு. ஆனா அப்பவே அவர தொடர்பு கொள்றது அவ்ளோ எளிமையா இருக்கல. ரொம்ப பிஸியா ரேஸ், சினிமா ஷூட்டிங்னு இருந்ததால கொஞ்சம் காத்திருந்து அஜித்கிட்ட கதை சொல்ல, அவருக்கு கதை பிடிக்கலனு ரிஜக்ட் பண்ணிட்டாரு போல.

அஜித்த தொடர்ந்து விஜய்க்கிட்ட கதை சொல்ல போயிருக்காரு கௌதம். ஆனா அந்த சமயத்துல விஜய் நிறைய ஒப்பந்தம் ஆகியிருந்ததால படம் செய்ய முடியாதுனு சொல்லி அனுப்பிட்டாராம். 

மூனாவதா சூர்யாவுக்கு கதைய சொல்லி ஓகே பண்ணி, படத்த எடுத்து ரிலீஸ் பண்ணி தமிழ்நாடே தன்ன பத்தி பேசுறமாதிரி வச்சிட்டாரு கௌதம் மேனன்.  கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதையைத்தான் தன்னோட ஐடலான கமல்ஹாசனுக்கும் சொல்லி படம் எடுத்து பரபரப்பா பேச வச்சாரு. வேட்டையாடு விளையாடு படம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்