Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Surya Birthday Special 2022: இன்று விருது வாழ்த்து, நாளை பிறந்தநாள் வாழ்த்து....!

Gowthami Subramani July 22, 2022 & 18:15 [IST]
Surya Birthday Special 2022: இன்று விருது வாழ்த்து, நாளை பிறந்தநாள் வாழ்த்து....!Representative Image.

Surya Birthday Special 2022: ஜூலை 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சூர்யா அவர்களுக்கு, ஜூலை 22 ஆம் நாள் அவர் நடித்த சூரறைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வாங்கி சாதனை படைத்துள்ளார். இன்று 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியா முழுவதும் மொத்தம் 295 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. நடுவர் குழு உறுப்பினர்கள், 140 ஆவணப்படங்களையும், 66 திரைப்படங்களையும் பார்த்தனர்.

அதிலிருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த திரைக்கதையாக சூரரைப் போற்று படம், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு, சிறந்த நடிகைக்கான விருது அபர்ணபாலா, சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரறைப் போற்று என ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

நாளை 47 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று தேசிய அளவில் விருது வாங்கியிருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுக்கான வாழ்த்துகள், பிறந்தநாளிற்கான வாழ்த்துகள் என வாழ்த்துக்கள் குவியப் போகும் சூர்யா எல்லையில்லா மகிழ்ச்சியடைவார். இந்த பிறந்தநாள் இது வரை இல்லாத ஒரு ஸ்பெஷல் நாளாக இருக்கும் எனக் கூறப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்