திருவள்ளுவர், ராஜராஜ சோழன் என அடுத்தடுத்து பலரை இந்துக்களாக காட்ட முயல்கிறார்கள் என பொருள்படும்படி இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருந்த நிலையில், டிவிட்டரில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்கிற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
சமூகத்தில் பேசப்படும் விவாதங்கள் பொதுவாகவே டிவிட்டர் தளத்திலும் எதிரொலிக்கும். சமீபத்தில் வெற்றிமாறன் பேசிய விசயத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். விழா ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் ராஜராஜ சோழன் தமிழர், அவர் இந்து கிடையாது என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க, கமல்ஹாசன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ராஜராஜ சோழன் இந்து கிடையாது, அந்த காலத்தில் இந்து என்பதே இல்லை. சைவம், வைணவம்தான் என்று கூறிவருகின்றனர். மேலும் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸும் இதை கூறியிருந்தார்.
தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க நினைக்கிறோம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள் என கூறி #Tamilsarenothindus என்கிற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…