தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்கள் இன்று காலை 11.45 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வெளியானது. இதனால் ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர்.
முதல் போஸ்டரைப் பார்த்தவர்கள் படத்தைப் பற்றிய கலாய்க்கும் நிலையில், ரெண்டாவது போஸ்டர் சிறப்பாக அமைந்தது. அவர்களே போஸ்டர் நல்லா இருக்கு, விஜய் லுக் சூப்பர் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
காலையில் உலகநாயகன் கமல்ஹாசன் விஜய்யை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே, கமல்ஹாசன் ரசிகர்களும் விஜய் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தனர். மேலும் விஜய் ரசிகர்கள் விக்ரம் படத்துக்கு கொடுத்த வரவேற்பு மற்றும் ஊக்கம் காரணமாக இரு ரசிகர்களுக்கும் இடையே நல்ல புரிதல் உருவாகியுள்ளதால், அவர்களும் தளபதி பற்றி பல விசயங்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில்தான் 3 போஸ்டர்கள் டிசைன் செய்தவருக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 1 அல்ல 2 அல்ல கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் போஸ்டர் டிசைன் செய்தவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இதை வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அந்தணன் தெரிவித்துள்ளார். இதனால் இதை நம்புவதா வேண்டாமா என்பது தெரியாமல் டுவிட்டர் வாசிகள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…