Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 - இந்த வாட்டி உறுதியா திரை தீப்பிடிக்கப்போகுது...! லோகி சம்பவம் அப்படி..

UDHAYA KUMAR June 29, 2022 & 19:30 [IST]
தளபதி 67 - இந்த வாட்டி உறுதியா திரை தீப்பிடிக்கப்போகுது...! லோகி சம்பவம் அப்படி..Representative Image.

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. 

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பர்ஸ்ட் லுக்கை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 2வது, 3வது லுக் போஸ்டர்கள் சிறப்பாக அமைந்தது. இருந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. இதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்குள்ளாகி, பெரும் ஏமாற்றத்துடன் நிறைவடைந்தது. இதனால் அடுத்த படத்தை மிகவும் வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் கொண்டு செல்ல விஜய் லோகேஷுடன் இணைந்துள்ளார். 

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அதிக பொறுப்புடனும் அதிக உற்சாகத்துடனும் தளபதி 67 படத்துக்கு ஸ்கிரிப்ட் செதுக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அதில் விஜய் 50 வயது கதாநாயகனாக நடிக்கிறாராம். அதிலும் கேங்க்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ள நிலையில் இது உண்மையாக இருந்தால் நிச்சயமாக திரை தீப்பிடிக்கும்....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்