Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Strawberry Moon: வானில் நிகழவிருக்கும் ஆச்சரியம்....மக்களே மிஸ் பண்ணிராதீங்க...!

madhankumar July 13, 2022 & 16:17 [IST]
Strawberry Moon: வானில் நிகழவிருக்கும் ஆச்சரியம்....மக்களே மிஸ் பண்ணிராதீங்க...!Representative Image.

இன்றைய நாள் ஆனி மாத பௌர்ணமி நாளாகும், முழு நிலவு வானில் தோன்றும், மேலும் இந்த நாளில் தான்  இந்த 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் வானில் தோன்ற உள்ளது. இந்த பெரிய நிலா 3 நாட்கள் வரை நீடிக்கும். நிலா  பூமிக்கு மிக நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தெரியலாம்.  மற்ற பெளர்ணமி நாட்களை விட  வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படும்.  

உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் இந்த சூப்பர் மூன்-ஐ இன்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே' அல்லது 'மெட் மூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் சுமார் 3 அல்லது 4 முறை நிலவானது பூமிக்கு மிக அருகில் வரும் அவ்வாறு வரும்போது வழக்கத்தை விட 17 சதவீதம் நிலவு பெரியதாகவும், 30 சதவீத அதிக ஒளியுடன் காணப்படும். 

இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிமீ தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் உருவான சூப்பர் மூனுக்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயரிடப்பட்டது. ஆனால் சென்ற மாத நிலா இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை, ஆனால் இந்த மாதம் தெரியும் இந்த நிலவு சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர் பூமிக்கு அருகே வர உள்ளது எனவும் இன்று பிற்பகல் முதல் வானில் இருக்கும் நிலவை வெறும் கண்ணால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினத்திற்கு பிறகு அடுத்த சூப்பர் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன்பின் 2023 ஜூலை 3ம் தேதி தான்  சூப்பர் மூன் வானத்தில் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூப்பர் மூன் நிகழ்வால் கடல், பெருங்கடல்களில்  அலைகள் ஆக்ரோஷமாக எழும்பும். கடல் கொந்தளிப்பும் அதிகமாக காணப்படும் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்