Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜானி மாஸ்டரா ஆள விடுடா சாமி! நா வேற ஆள இறக்குறேன்! சொல்லி அடித்த விஜய்

UDHAYA KUMAR May 16, 2022 & 18:30 [IST]
ஜானி மாஸ்டரா ஆள விடுடா சாமி! நா வேற ஆள இறக்குறேன்! சொல்லி அடித்த விஜய்Representative Image.

ஜானி மாஸ்டரை மறுபடியும் வச்சு சாங் பண்ண வேண்டாம் நா வேறொரு ஆள சொல்றேன் என விஜய்யே கேட்டு வரவழைத்த டான்ஸ் மாஸ்டர்தான், விஜய் 66 படத்தின் இரண்டாவது பாடலுக்கு நடன பயிற்சி அளித்துள்ளாராம். இதனால் தூள் தெறிக்கப்போகுதுனு ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

தளபதி 65 படத்தை நெல்சன் இயக்க, ஜானி மாஸ்டர் பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்திருந்தார். விஜய் மாதிரி ஒரு சூப்பர் டான்சருக்கு சம்பந்தமே இல்லாமல் ஸ்டெப்ஸ் கொடுத்து சூப்பர்ஹிட் பாடலை எல்லாரும் கேலி செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் விஜய் ரசிகர்களே ஜானி மாஸ்டர் வேண்டாம் நம்ம ஊர்ல இருந்து ஆள புடிங்க என சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர். இந்நிலையில், தளபதி 66  படத்தில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனராம். ஆனால் விஜய்யோ வேண்டவே வேண்டாம். நானே ஒருத்தர கூட்டிட்டு வரேன்னு போஃன் அடித்தாராம். 

தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. அங்கும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளதாம். பின்னர் அதைத் தொடர்ந்து ஒரு சண்டைக் காட்சியும் படம்பிடிக்கப்படவுள்ளதாம். 

படம் முழுக்க முழுக்க செண்டிமென்ட் காட்சிகளால் உருவாக்கப்படவுள்ளது. சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள்.  விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பாடல்கள் மற்றும் இசை தமன். 

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ள நிலையில், இந்த பாடலுக்கு வேறு ஒரு நடன இயக்குநரை விஜய் வரவழைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நம்ம பிரபுதேவாதான். விஜய்யும் பிரபுதேவாவும் சேர்ந்தா வேற லெவல்தான் போங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்