Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசும், துணிவும் பின்வாங்குமா? அஜித் விஜய்க்கு போட்டியாக பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ள ஹீரோ!

UDHAYA KUMAR October 19, 2022 & 15:00 [IST]
வாரிசும், துணிவும் பின்வாங்குமா? அஜித் விஜய்க்கு போட்டியாக பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ள ஹீரோ! Representative Image.

வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இதனால் திரையரங்குகள் இப்போதே பல திட்டங்களைக் கைவசம் வைத்துள்ளன.  இந்நிலையில், புதியதாக இந்த பட்டியலில் விமலும் இணைந்துள்ளார். 

விஜய், அஜித், விமல் இடையே இந்த முறை பாக்ஸ் ஆபிஸ் போர் நடைபெறும் எனவும், விமலுக்கு ஈடுகொடுத்து அஜித், விஜய் பட கலெக்ஷன் வருமா என விமல் ரசிகர்கள் சவால் விடுத்துள்ளனர். இதனால் அஜித், விஜய் படங்கள் ஓரிரு நாட்கள் பின்வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

அஜித் மற்றும் விஜய் படங்கள் எப்படி மோதிக்கொள்ளும், எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு, ரசிகர்கள் பலம் இருக்கிறது என்பதை சமூக வலைத்தளங்களில் நிகழும் விவாதங்களின் மூலமே தெரிந்துகொள்ள முடியும். 

விமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கவில்லை. மேலும் அவருடன் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு இந்த படத்தின் போஸ்டர் வெளியாகும் என தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்