Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

The Gray Man Movie Tamil Review: ஹாலிவுட்டின் ஒரு அதிரடி தமிழ் படமா... இந்த கிரே மேன்..!

Manoj Krishnamoorthi July 23, 2022 & 14:00 [IST]
The Gray Man Movie Tamil Review: ஹாலிவுட்டின் ஒரு அதிரடி தமிழ் படமா... இந்த கிரே மேன்..!Representative Image.

அவன்சர்ஸ் திரைப்படம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரத்தர்ஸை பிரபலமடைய செய்தது, இவரின் அடுத்த படத்தில் தனுஷ் இணையப்போகிறார் என்றவுடன் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீதான ஆவலை  அதிகமாகிறது. 

ஜூலை 22, 2022 அன்றி நெட்ஃபிளிக்ஸில் உலகம் முழுவதும் ரிலீஸானது, இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான தனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படமான 'தீ கேரே  மேன்' திரைப்படத்தின் கதையிலுள்ள சுவாரஸ்யத்தைக் காண்போம்.

கதைக்களம்

சிஐஏ விற்காக பணியாற்றும் கதாநாயகன் சியரா சிக்ஸ் (Ryan Gosling) கையில் கிடைக்கும்   மெமரி கார்டு, அதைக் கைப்பற்ற துரத்தும் வில்லன் கேங். அந்த மெமரி கார்டில் என்ன உள்ளது..? கதாநாயகனிடமிருந்து வில்லன் கைப்பற்றினாரா..? என்பது தான் கதையின் மையக்கரு ஆகும். 

திரை பார்வை

கதையின் ஆரம்பம் சிறையிலிருந்து சிஐஏ (CIA)வுக்காக வேலை செய்ய சிறையிலிருந்து கதாநாயகனிடம் கதை தொடங்குகிறது. கதையின் மெயின்  ப்ளாகான மெமரி கார்டு கதாநாயகன் கையில் கிடைத்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. 

இந்த மெமரி கார்டை கைபற்ற பல முயற்சிகள் நடக்க பல நாடுகளுக்கு கதை பயணிக்கிறது,  கதாநாயகன் சியரா சிக்ஸ் (Ryan Gosling) பிடிக்க வில்லன் கிரிஸ் இவன் துரத்தகிறார். அட.... வில்லன் வேற யாருமில்லை நம்ம கேப்டன் அமேரிக்கா தான். 

மெமரி கார்டை கைபற்ற ஒரு கேட் அண்ட மவ்ஸ் கேம் நடக்கிறது...... இதில் வரும் அசத்தலான சண்டை காட்சிகள் நம்மை 2 மணி நேரம் வேறு சிந்தனை இல்லாமல் போவதில் தான் உள்ளது இயக்குநரின் நேர்த்தியான  இயக்கம். 

மிரட்டலான வில்லனாக தன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக ஒட்டியுள்ளார் கிரிஸ் இவன், திரைக்கதையில் சிறிய நேர மட்டுமே வந்தாலும் தன் கேரக்டரின் முக்கியத்துவத்தை அருமையாக வெளிக்காட்டி நம்மை கவர்ந்துள்ளார் தனுஷ். 

படத்தின் தொய்வாக பார்ப்பது என்னவென்றால் திரைப்படத்தின் முதல் 30 நிமிடமே ஆகும், அதன்பிறகு வேகமாக நகரும் திரைக்கதை இறுதியில் ரசிகரை திருப்திப்படுத்துவதில் தவறியுள்ளது. முக்கியமாக அவன்சர்ஸ் திரைப்படத்தில் இருந்த சுவாரஸ்யம்  இந்த படத்தில் சற்று குறைவாக இருப்பது தான் ஒரு பெரிய மைனஸாக உள்ளது. 

திரைப்படத்தில் முக்கியமான பலமாக அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது, நம்மை சற்றும் திரும்பாதவாறு அமைந்தது சிறப்பாகும்.

ஆக்‌ஷன் - 4/5

திரைக்கதை- 3/5

கதை- 2.75/5

இயக்கம்- 3/5

பின்னணி இசை- 3.5/5

அதிரடி திரைப்பட ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் 'தீ க்ரே மென்' திரைப்படம் பொதுவான ரசிகர்களின் பார்வைக்கு  வழக்கமான ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம் ஆகும்.  

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…  

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்