Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,668.76
-203.53sensex(-0.28%)
நிஃப்டி22,356.70
-48.90sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Thiruchitrambalam Review In Tamil : "திருச்சிற்றம்பலம்" இனிக்குமா....! இல்ல புளிக்குமா..! திரைவிமர்சனம்…!

Manoj Krishnamoorthi August 18, 2022 & 11:15 [IST]
Thiruchitrambalam Review In Tamil : Representative Image.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் வெளியான "திருச்சிற்றம்பலம்" மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் இயக்குநர் மித்ரன் படத்தில் இருக்கும் மெஸெக் தான், சமூகத்திற்கு  தேவையான கருத்தை பொழுதுபோக்கு அம்சமான திரையில் கதையோடு இவர் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கும். ஹாலிவூட் வரை சென்றாலும் நம் தனுஷ் என் நிரந்தர இடம் கோலிவுட் என்பதை விளக்கும் வகையில் வரிசையாக தனுஷின் திரைப்படங்களில் உள்ளன, இதில் மீண்டும் அனிரூத் தனுஷ் கூட்டணி என்பதால் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. 

சரி.....! விஷயத்துக்கு வருவோம் தனுஷ் பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா,  நித்யா மேனன், ப்ரியாபவானி சங்கர், ராஷி கண்ணா நடிப்பில் வெளிவந்த 'திருச்சிற்றம்பலம்' இனிக்குமா..? இல்ல....? மொத்தத்தையும் இங்க எப்படி சொல்வது... திருச்சிற்றம்பலம் படத்தின் திரை பார்வை (Thiruchitrambalam Movie Review In Tamil)  உங்களுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கதைக்களம் (Thiruchitrambalam Vimarsanam)

கதாநாயகன் என்றால் மாஸாக இருக்கும் ஒருவரை மட்டுமே இதுவரை திரையில் பார்த்திருப்போம், அது காட்சிப்படுத்தலாக இருந்தாலும் நமக்கு சந்தோஷம் அளித்திருக்கும். ஆனால் தனுஷின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அந்த மாஸான பசங்க  2% மட்டும் தான் பாக்கி 98% தான் யதார்த்தம் ஆகிறது. அந்த யதார்த்தம் தான் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் மையக்கரு ஆகிறது.

திரை பார்வை (Thiruchitrambalam Review In Tamil)

மற்றவர்களின் கேலிக்கு ஆளாகும் திருச்சிற்றம்பலம் (தனுஷ்) ஒருபுறம் அவருக்கு ஆறுதலாக வரும் நித்யாமேனன் இருவருமே யதார்த்தமான நடிப்பின் உச்சம், நம் நடைமுறையில் காணும் ஆண் பெண் நட்பைக் கேலியும் கலந்து அன்பான உறவாகக் காட்சிப்படுத்தியத்தில் தான் மித்ரனின் இயக்குநர் டச் உள்ளது.

பொதுவாக நம்ம வீட்டில் இருக்கிற பிரச்சனை தான் அப்பா மகன் போர் தான்...இத போர் என்று  கூட சொல்ல முடியாது அப்பாவின் அன்பான கண்டிப்பு ஆகும். அதையும் திரையில் அருமையாக பிரகாஷ் ராஜ் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். திரையில் பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் ஒன்றாக வரும்போது அப்பாவி மகன் தந்தையிடம் எப்படி நடுங்குவாரோ அப்படி யதார்த்தமாக இருவரும் கதையில் வாழ்ந்துள்ளனர்.

முக்கியமான இன்னொரு கேரக்டர் வேறுயார் இன்னொரு திருச்சிற்றம்பலம் தான்....நம்ம இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் தான் சிறப்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார், மாடர்ன் ஜென்ரேசன் தாத்தாவாக நம்மை கவர்ந்துள்ளார். 

படத்தில் மூன்று   கதாநாயகிகளுக்கு தனித்தனி முக்கியத்துவம் இருப்பது தான் திரைப்படத்தை போர் அடிக்காமல் எடுத்து செல்கிறது, முக்கியமாக நித்யா மேனன் கதாபாத்திரம் வெகுவாக அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்தது படத்திற்கு பலமாகும்.

திரைக்கதை- 3.5/5

கதை- 3/5

இசை- 4/ 5

இயக்கம்- 3.75/ 5

ஒளிப்பதிவு- 3/5

மொத்தத்தில், இன்றைய சமுகத்தில் தத்தளிக்கும் அனைத்து அப்பாவி இளைஞர்களின் தேடலின் முகவரி தான் 'திருச்சிற்றம்பலம்' ஆகும். இது நிச்சியம்  கவலை மறக்க செய்யும் நல்ல எண்டர்டைண்ங்கிங் மூவி ஆகும். 

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Thiruchitrambalam Review In Tamil |  Thiruchitrambalam Tamil Review | Thiruchitrambalam  Review | Thiruchitrambalam Vimarsanam In Tamil | Thiruchitrambalam Vimarsanam | Thiruchitrambalam Thirai Vimarsanam | திருச்சிற்றம்பலம் Review |  திருச்சிற்றம்பலம் விமர்சனம் | Thiruchitrambalam Review Tamil | Thiruchitrambalam Official Review | Thiruchitrambalam Movie Review In Tamil

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்