Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,890.88
-251.92sensex(-0.34%)
நிஃப்டி22,145.85
-66.85sensex(-0.30%)
USD
81.57
Exclusive

Viruman Movie Review In Tamil : குடும்பங்கள் கொண்டாடும் “விருமன்” திரைப்பட விமர்சனம்!

Manoj Krishnamoorthi August 12, 2022 & 11:50 [IST]
Viruman Movie Review In Tamil  : குடும்பங்கள் கொண்டாடும் “விருமன்” திரைப்பட விமர்சனம்!Representative Image.

கார்த்தி எப்போதும் வேஷ்டி கட்டி திரையில் தோன்றினாலுமே கொண்டாட்டம் தான்.... அதற்கு காரணம் அவர் என்னதான் அமெரிக்காவில் படித்தாலும் நம் மண் மணம் மாறாத வண்ணம் திரையில் யதார்த்தமான சாமானியனாகக் காட்சியளிப்பது ஆகும். இவர் அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் தமிழ்சினிமாவில் மறக்க முடியாத படமாக அமைந்தது, அதன்பிறகு இவர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியாகும். 

மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் கார்த்தி பக்கா கிராமத்து இளைஞனாக தோன்றிய படமே "விருமன்" ஆகும்.  உறவுகளின் முக்கியத்துவத்தை கிராமத்து வட்டாரத்தை மையப்படுத்தி வரும் திரைப்படத்தில் முத்தையாவின் படங்கள் இருக்கும் தந்தை மகன் உறவை மையப்படுத்திய "விருமன்" திரைப்படத்தின் திரை பார்வை இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதைக்களம் (Viruman Tamil Review)

தந்தை மகன் உறவை மையப்படுத்திய கதை தான் "விருமன்" ஆகும். ஊருக்குள் கௌரவமாக வாழும் அரசு அதிகாரி பிரகாஷ்ராஜுக்கும் அவரின் நான்காவது மகனுக்கும் நடுக்கும் மோதலின் குறுக்கே வில்லன் வருவதும், தந்தை மகன் பாசத்தை உணர்த்தும் கதையைக் கொண்ட "விருமன்"   எப்படி கார்த்தி பிரகாஷ்ராஜை புரிந்து கொள்கிறார் என்பது விருமனில்  முக்கிய புள்ளியாக உள்ளது.

திரை பார்வை (Viruman Movie Review In Tamil)

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்பட பாணியில் வெளிவந்த இந்த விருமன், வழக்கமான முத்தையா படப்பாணியில் இருப்பது அச்சரியமாக இல்லை.  தென்மாவட்ட தோரணையில் கம்பீரமாகத் திரையில் வருகிறார்  கார்த்தி. இவரின் யதார்த்தமான நடிப்பு திரைக்கதையின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. படத்தின்  மையமாக கார்த்தி அமைந்தாலும் மையப்புள்ளியாக இருப்பது பிரகாஷ் ராஜ் ஆகும். ஒரு நேர்மையான அரசு அதிகாரி எப்படி வாழ்வாரோ அவ்வாறு திரையில் ஜோலிக்கிறார். மையத்தையும் மையப்புள்ளியையும் சேர்க்கும் இணையாக ஆர்.கே.சுரேஷ் உள்ளார்.  இவர்கள் மூவர்களின் நடிப்பு திரைக்கதையில் முக்கியமான பலமாக மைந்து உள்ளது.

கதாநாயகியாக அதிதி ஷங்கர் கதையின் தேவைக்கு தக்கவாறு திரையில் தன் நடிப்பைக் காட்டியுள்ளார். அனைத்து ஜார்னலிலும் கலக்கும் யுவனின் இசை இந்த படத்திற்கு பிரமாண்டமான தேர்வாகும். ஆக்ஷன் காட்சிக்கு ஏற்றார் உள்ள பின்னணி இசை நம்மை விரைவாகக் கதைக்களத்திற்குள் இழுத்து செல்கிறது. 

மாஸான திரைக்கதை கொண்டாலும் ஒரு சில காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைப்பதாக இருந்தாலும் அதையும் நடிப்பால் கார்த்தி, பிரகாஷ் ராஜ், வடிவுக்கரசி, ராஜ்கிரண் என அனைவரும் போட்டிப்போட்டு நடித்து ரசிகர்களுக்கு பக்கா குடும்ப படமாக அமைத்துள்ளனர்.

திரைக்கதை - 3.5/ 5

கதை - 3/5

ஆக்‌ஷன் - 3.75/ 5

இசை - 4/5

இயக்கம்- 3/ 5

குடும்பத்துடன் சென்று பொழுதைக்  கழிக்க காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல் என அனைத்தும் கொண்ட  "விருமன்" சிறந்த குடும்ப திரைப்படம் ஆகும். 

மேலும் செய்திகள்

ஆவணி மாதம் 2022, உங்கள் ராசியின் பலன்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

மேஷம்  ரிஷபம் 
மிதுனம்    கடகம்   
 சிம்மம்      கன்னி    
துலாம்       விருச்சிகம்     
தனுசு          மகரம்     
   கும்பம்          மீனம்     

 

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 

Tag: Viruman Movie Review In Tamil | Viruman Tamil Review | Viruman Movie Review | Viruman Tamil Movie Review | Viruman Padam Vimarsanam | Viruman Padam Vimarsanam Tamil | விருமன் விமர்சனம் | விருமன் திரை விமர்சனம் | விருமன்  கதை | Viruman Movie Explain In Tamil | Viruman Movie Explained In Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்