Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Best Of 2022 : கமல்ஹாசன், மணிரத்னம், கௌதம் மேனன்…. அல்டிமேட் டாப் 10 படங்கள் 2022 இவைதான் | Kamal haasan, ManiRathnam, Gautham Vasudev Top on The list

Editorial Desk Updated:
Best Of 2022 : கமல்ஹாசன், மணிரத்னம், கௌதம் மேனன்…. அல்டிமேட் டாப் 10 படங்கள் 2022 இவைதான் | Kamal haasan, ManiRathnam, Gautham Vasudev Top on The listRepresentative Image.

பொழுதுபோக்கு என்றாலே பெரும்பான்மை மக்களுக்கு சினிமாதான் என்றாகிவிட்ட சூழ்நிலையில், கொரோனா லாக்டவுன்களிலிருந்து மீண்டு வந்த மக்கள் இந்த வருடம் நல்ல சினிமாக்களை வரவேற்று கொண்டாடியிருக்கிறார்கள். தங்களை படத்தின் கதாநாயகனாகவே கற்பனை செய்துகொள்ளும் வசதி இருப்பதாலேயே நல்ல சினிமா என்றும் ஜெயிக்கிறது. 3 மணி நேரம் தங்களை மறந்து தங்களின் பிரதிநிதியான ஹீரோ கதாபாத்திரங்களை ரசித்து கொண்டாடி வெற்றி பெறச் செய்கின்றனர்.

இந்த வருடம் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட மூத்த, இளைய தலைமுறை இயக்குநர்கள், கதாநாயகர்களின் வெற்றிப் பங்களிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறது Search around Web இணையதளம்

முதல் இடம்: விக்ரம்

தமிழ் திரையுலகில் இன்றைய தேதியில் முக்கிய இயக்குநராகத் திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நாயகனாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடிப்பில் வெளிவந்த படம் "விக்ரம்". பல  ரௌடிகள் நிறைந்த சாம்ராஜ்யத்தின் மூலமாக நடக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் கதைக்களத்தில் புதிய திருப்பங்களுடன் இடம்பெற்ற அதிரடி காட்சிகள் கதைக்கு வலு சேர்த்தன. இத்திரைப்படத்தில் அனிருத்தின் இசையில்  இடம் பெற்ற பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தது. மொத்தத்தில் உலகநாயகன் கமலின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த விக்ரம் திரைப்படம் 2022-ல்  டாப் -10 படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.  

இரண்டாவது இடம்: பொன்னியின் செல்வன்

இயக்குநர்களின் சிகரமாகத் திகழும் மணிரத்தினம் அமரர் கல்கியின் வரலாற்றுப் படைப்பாகிய பொன்னியின் செல்வன் கதையை மையமாக வைத்து இயக்கிய படம் தான் "பொன்னியின் செல்வன் பாகம்-1", இந்த படம் கல்கியின் கதைகளைப் படிப்பவர்களையும் கூடுதலாக  அனைத்து மக்களிடமும் சேரும் வகையில் பல தடைகளைத் தாண்டி படிக்கப்பட்ட சரித்திர படமாகும். இந்த கதையில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களான வந்தியத்தேவன்,அருள்மொழி வர்மன்,ஆதித்திய கரிகாலன் ,நந்தினி ஆகியோரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் விதமாக முறையாக கார்த்தி,ஜெயம் ரவி ,விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திப் படத்தின் வெற்றியை உறுதி செய்தனர். எ.ர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் சென்று படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது என்றே கூறலாம். மொத்தத்தில் "பொன்னியின் செல்வன் பாகம்-1" இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை.

மூன்றாவது இடம்: வெந்து தணிந்தது காடு 

காதல் படங்களின் இயக்குநர் என்று இந்த தலைமுறை திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தன்னுடைய பழைய அதிரடி கலந்த திரில்லர் படங்களை நினைவூட்டும் வகையில் இயக்கிய படம் தான் "வெந்து தணிந்தது காடு",நடிகர் சிம்புவை வைத்து வெறும் காதல் படங்களை மட்டும் இயக்கி வந்த இவர் புது முயற்சியாக ஒரு கேங்க்ஸ்டர் படத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார்.நடிகர் சிம்புவின் தனது உடலை வருத்தி புதிய பரிமாணத்தில் மிரட்டல் நடிப்பாலும்  எ.ர்.ரகுமானின் இசையாலும்  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது  


 

நான்காவது இடம் : லவ் டுடே 

இந்த வரிசையில் அடுத்தாக வருவது கோமாளி படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் "லவ் டுடே" படம் தான், இந்த காலத்தில் காதல் எப்படியுள்ளது ,அந்த காதலில் முக்கியம் என்ன அதில் வரும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை காமெடி கலந்த எமோஷனோடு  இயக்கி தானும் நடித்து வெளியிட்டு வெற்றிபெற்றுள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்குப் பெரிய பலமாக இருந்தது,மேலும் இந்த திரைப்படம் இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது என்றே சொல்லலாம்.இந்த படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம்  பிரதீப் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஐந்தாவது இடம்: கடைசி விவசாயி

அடுத்தாக நம் வரிசையில் வரும் திரைப்படம் வசூல் சாதனையைத் தாண்டி  படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது என்றே சொல்லலாம். அந்த படம் தான் "கடைசி விவசாயி" இயக்குநர்  மணிகண்டன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் வெளியாகப் பல தடைகள்  வந்த போதிலும்,இந்த கதையின் தன்மையால் அனைத்து ரசிகர்கள் இடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.ஒரு ஊரில் வாழும் வயதான விவசாயி ஒருவர் விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் படத்தில் மட்டுமில்லாமல் பார்வையாளர்கள்  அனைவருக்கும் தனது இயல்பான நடிப்பின் மூலம் பதிய வைத்தார் திரைத்துறையில் உள்ள பல முன்னனி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற படம் "கடைசி விவசாயி" என்பதில் ஐயமில்லை.  

 

     

ஆறாவது இடம்:டான் 

புதிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தனது முதல் முயற்சியில் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படம்  "டான்", சிவகார்த்தியேன் கதாநாயகனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா,சமுத்திர கனி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களை வைத்து தனது  கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவன் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியோடும்   எமோஷனோடும்  காட்டி யோசிக்க வைத்துள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. ஒரு பெற்றோர் தங்களின் குழந்தையை எந்த பார்வையோடு வளர்க்கிறார்கள் என்று மிகவும் உண்மையாகக் காட்டியுள்ளார்.இதனால் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பங்களும் கொண்டாடும் வெற்றியாக "டான்" படம் அமைந்தது.    


 

ஏழாவது இடம்: திருச்சிற்றம்பலம் 

 தனுஷ் கதாநாயகனாக நடிக்க இயக்குநர் மித்ரன் ஜவகர் எழுதி இயக்கிய படம் "திருச்சிற்றம்பலம்",ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் இளைஞன் தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகிறான்.அவன் வாழ்க்கையில் தோழியாக இருக்கும் பெண் உதவியுடன்  காதலிக்க தயாராகி அவன் சந்திக்கும் அனுபவங்கள் இறுதியாக எது உண்மையான காதல் என்று புரிய வைக்கும்  கதைக்களம்  இந்த கால இளைஞர்கள் வாழ்க்கையோடு அப்படியே ஒற்றுப் போவதால் பலரிடைய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.கதாநாயகனாக தனுசும் ,கதாநாயகிகளாக  நித்யா மேனன் ,ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் படத்தில்  நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினர்,மேலும் பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. 


 

எட்டாவது இடம்:கார்கி 

இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வெளியான படம் "கார்க்கி",ஒரு சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்

பிரச்சனைகள்,முக்கியமாகக் குற்றம் சாற்றப்பட்டு சிறையில் இருக்கும் தனது தந்தைக்காகப் போராடும் பெண் சந்திக்கும் பிரச்சனை, இறுதியாக அறியப்படும் உண்மையின் மூலம் தனது வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கும் ஒரு  சாதாரண பெண்ணின் முடிவு பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய கருத்தை மிகுந்த சோகத்தோடு வழங்கிய கதை கார்கி.ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்த எடுக்கப்பட்ட படம் நாம் வாழும் சமுதாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது என்பது உண்மை.ஒரு கதாநாயகியாகச் சாய் பல்லவி இந்த படத்தின் கதைக்கு நீதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

ஒன்பதாவது இடம் : டைரி 

புது விதமான திரில்லர் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெரும் வழக்கத்தை வைத்துள்ள நடிகர்  அருள்நிதி இந்த முறையும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்து வெளியான படம் "டைரி". ஒரு திரில்லர் படமாக ஆரம்பிக்கும் கதையில் பல திருப்பங்களுடன்  மிரளவைத்து புதிய அனுபவத்தை அளித்துள்ளார் இயக்குநர் இன்னாசி பாண்டியன். காவல்துறை அதிகாரியாக அருள்நிதி  தனது கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் புதிய கதைகளுக்கு மிகுந்த வரவேற்புள்ள நிலையில் "டைரி" படம் பெரிய ஹிட்டாகவே அமைத்தது.    

பத்தாவது இடம் : சர்தார் 

நடிகர் கார்த்தி நடித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் தான் "சர்தார்". இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது, கார்த்தி இந்த படத்தில் இருவேடங்களில் நடித்துக் கலக்கினார்.தண்ணீரை வைத்து சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில்  கார்த்தி, ராசி கண்ணா மற்றும் லைலா எனப் பலர் தங்கள் சிறப்பான நடிப்பால் வெற்றியைத் தேடித் தந்தனர் 

 

இந்த ஆண்டில் வெளியான பல படங்களில் சிறப்பான கதையாலும் , நடிகர்களின் நேர்த்தியான நடிப்பாலும் பல தரப்பட்ட திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்த படங்களில் முக்கிய  டாப்-10 படங்களை இந்த பட்டியலில் பதிவிட்டுள்ளோம்.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்