Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவீட் எடு கொண்டாடு....இன்று உலக சாக்லேட் தினம்...!

madhankumar July 07, 2022 & 11:52 [IST]
சுவீட் எடு கொண்டாடு....இன்று உலக சாக்லேட் தினம்...!Representative Image.

சாக்லேட் பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்...அப்படியான சாக்லேட் பிரியர்களுக்கு பிடித்தமான உலக சாக்லேட் தினம் தான் இன்று.

நாம் சாப்பிடும் இனிப்புகளில் பல திகட்டும் நிலைக்கு தள்ளிவிடும், ஆனால் திகட்டாத இனிப்பு என்றால் அது சாக்லேட்டின் இனிப்புதான். சாக்லேட்டில் மில்க் சாக்லேட், டார்க் சாக்லேட், கசக்கும் சாக்லெட், பேக்கிங் சாக்லெட், ரூபி சாக்லெட் என பல உள்ளன. காதலிகள், காதலங்கள் மட்டுமில்லாமல் உலக சாக்லேட் தினமான இன்று உங்களுக்கு பிரியமான அனைவர்க்கும் கொடுத்து பண்டிகையை கொண்டாடுங்க.

கோகோ டூ சாக்லேட்:

அனைவரும் விரும்பி உண்ணும் சாக்லேட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது கோகோ. இந்த கோகோ இயற்கையாகவே கசப்பு சுவை உடையது, மேலும் இதில் அதிகமாக ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது, சுவைக்காக அதில் சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை, இந்த ஆண்டிஆக்ஸிடெண்ட் தன்மையை குறைத்து நமக்கு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான சாக்லெட்டை தருகிறது.

இனிப்பு சாக்லேட்:

பொதுவாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும், இதன் வாசனை மற்றும் தோற்றம் மிக சிறப்பானதாக இருக்கும், இதில் சேர்க்கப்படும் இனிப்பு பொருளானது நாம் விரும்பி ருசிக்கும் சாக்லெட்டை நமக்கு தருகிறது. மேலும் இது ஒரு ரிச் லுக் மற்றும் சுவையை தருகிறது.

டார்க் சாக்லேட்:

இந்த டார்க் சாக்லெட்டானது அதிக அளவில் இனிப்பு இல்லாமல் ஓரளவு கசப்பு தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையான சாக்லேட் இனிப்புகள் மற்றும் கேக்குகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற சாக்லேட்டுகளுடன் ஒப்பிடும்போது டார்க் சாக்லேட் ஆரோக்கியமான வகை சாக்லேட்டாக கருதப்படுகிறது.ஏனெனில் இதில், சர்க்கரை இல்லை மற்றும் அதிக அளவு கோகோ உள்ளது.

மில்க் சாக்லேட்:

இந்த மில்க் சாக்லெட்டானது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதில் பால், கோகோ மற்றும் சர்க்கரை உள்ளது. கோகோ மற்றும் பாலின் சதவீதம் தேவையை பொறுத்து மாறுபடும்.

வெள்ளை சாக்லேட்:

இந்த வெள்ளை சாக்லேட்டில் அதிகமான அளவு பால் இருக்கும், மேலும் இதில் கோகோவின் வெண்ணெய் மட்டுமே சேர்க்கப்படுகிறது. இது சாக்லேட் உள்ளே கீரிம் வெளியே அதன் வெள்ளை நிறத்தை அளிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்