Thu ,Jul 25, 2024

சென்செக்ஸ் 80,148.88
-280.16sensex(-0.35%)
நிஃப்டி24,413.50
-65.55sensex(-0.27%)
USD
81.57
Exclusive

ஜூனியர் என்டிஆர் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? | Untold Story About Junior NTR in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜூனியர் என்டிஆர் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? | Untold Story About Junior NTR in TamilRepresentative Image.

ஜூனியர் என்டிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவ் ஜூனியர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல், பாடரகாவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறது. சிங்கிள் டேக் நடிப்பு, டயலாக் டெலிவரி மற்றும் எந்த ஒத்துகையும் இல்லாமல் நடனமாடுவதில் கெட்டிக்காரர். 

இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 'டோலிவுட்டின் இளம் புலி' என்றும் அழைக்கப்படுகிறார். இவரை பற்றி தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தமிழில் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு தமிழ் மக்கள் நெஞ்சங்களில் ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். சரி வாங்க, இவர் யார்? எப்படி நடிக்க ஆரம்பித்தார்? குடும்பம் வாழ்க்கை பற்றிய அனைத்தையும் தெரிந்துக் கொள்ளலாம். 

ஜூனியர் என்டிஆர் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? | Untold Story About Junior NTR in TamilRepresentative Image

தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரனும், தெலுங்கு சினிமா நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா மற்றும் ஷாலினி பாஸ்கர் ராவ் ஆகியோரின் மகனுமான ஜூனியர் என்டிஆர் மே 20, 1983 ஆம் ஆண்டு ஹைதராபத்தில் பிறந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், ஹைதராபாத் செயின்ட் மேரி கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் முடித்துள்ளார்.

பிரம்மர்ஷி விஸ்வாமித்ரா (1991) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜூனியர் என்டிஆர், பின்னர் குணசேகர் இயக்கிய புராணத் திரைப்படமான ராமாயணம் (1996) திரைப்படத்தில் ராமர் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். கடைசியாக, 2022 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான படைப்பு RRR ல் கொமரம் பீமாக நடித்து பிரபலமடைந்தார். மேலும், ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் தெலுங்கு பதிப்பான பிக் பாஸ் 1 ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கியுள்ளார். 

ஜூனியர் என்டிஆர் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? | Untold Story About Junior NTR in TamilRepresentative Image

அழகான திருமண வாழ்க்கை:

ஜூனியர் என்டிஆர்க்கு வீட்டில் பெரியவர்களால் பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டு தான் திருமணம் நடந்தது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் ஜூனியர் என்டிஆர் - பிரணதி ஜோடிக்கு ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. அதோடு குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள, மிக பிரமாண்டமாக ரிசப்ஷனும் நடந்தப்பட்டது. தெலுங்கு திரையுலகில் எல்லோராலும் பார்த்து வியப்பு, ஆச்சர்யமும் அடையும் ஜோடி என்றால் அது ஜூனியர் என்டிஆர் - லட்சுமி பிரணதி ஜோடி தான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பது. இதில் மிக ஆச்சயர்மான விஷயம் ஒன்று இருக்கிறது. ஜூனியர் என்டிஆரும் பிரணதியும் சேர்ந்து உட்கார்ந்து நிறைய படங்கள் பார்ப்பார்களாம். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் சினிமா பற்றியும் ஜூனியர் என்டிஆரின் படங்கள் பற்றியோ திரையுலக தொழில் சார்ந்த விஷயங்களை வீட்டில் பேசிக் கொண்டதே இல்லையாம்.

ஜூனியர் என்டிஆர் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? | Untold Story About Junior NTR in TamilRepresentative Image

பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் எப்போதும் மிக எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கக் கூடியவர் ஜூனியர் என்டிஆர். வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் மிக அமைதி தான். அதேபோல மனதளவில் எப்போது சோகமாகவோ சோர்வாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய கிச்சனில் தான் இருப்பாராம். சோக மனநிலையில் இருந்து வெளிவர தன்னுடைய மனைவியை மனதில் நினைத்துக் கொண்டு அவருக்குப் பிடித்ததை சமைத்துக் கொடுப்பாராம். தற்போது இந்த தம்பதிக்கு நந்தமுரி அபய் ராம் மற்றும் நந்தமுரி பார்கவ ராம் என இரு மகன்கள் உள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்