Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வாரிசு ஒட்டுமொத்த வசூல் இப்ப வர எவ்ளோ தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
வாரிசு ஒட்டுமொத்த வசூல் இப்ப வர எவ்ளோ தெரியுமா?Representative Image.

50 கோடி, 100 கோடி, 150 கோடி, 210 கோடி என வரிசையாக ஒவ்வொரு நாளும் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. வாரிசு படம் உலகம் முழுக்க வசூலை அள்ளிக் குவித்து வருவதாக கணக்கு சொல்லப்படுகிறது. ஒருபுறம் இதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாலும், மறுபுறம் இதனை பலர் நம்ப மறுக்கின்றனர். 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை குடும்ப காவியமாக எடுத்து அதை வெற்றிப் படமாக்கி மகிழ காத்திருந்தார் தில் ராஜூ. வாரிசு படத்தை தயாரித்தவர் அவர்தான். படத்தின் மீதான நம்பிக்கையில் கொஞ்சம் ஓவராகத்தான் பேசிவிட்டோமோ என வருந்தினாலும் வருந்துவார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை அள்ளி குவிக்கத்தான் செய்கிறது. இப்போது அதுகுறித்த வேறொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

உலக அளவில் வாரிசு திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது படநிறுவனம். 

ஜனவரி 11ம் தேதி வெளியாகி உலக அளவில் 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்துள்ளது தளபதியின் வாரிசு. ஆனால் அதனுடன் வெளியான துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் படத்தின் வசூல் வாரிசை விட குறைவாகத்தான் இருக்கிறது. 

குடும்பங்கள் கொண்டாடும் படம், பொங்கல் இந்த இரண்டும் ஒன்றாக வந்துவிட்டால் சக்ஸஸ் கேரன்டிதான் என்பதை மனதில் கொண்டே இந்தமாதிரி ஒரு படத்தை எடுத்து குடும்ப ஆடியன்ஸ் தலையில் கட்டிவிட்டார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்