Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வருகிறது வாரிசு 3வது பாடல்.... இதோ அப்டேட்...! | varisu third single Update

UDHAYA KUMAR Updated:
வருகிறது வாரிசு 3வது பாடல்.... இதோ அப்டேட்...! | varisu third single UpdateRepresentative Image.

வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என்கிற அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்திருக்கிறார்கள். 

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி, துணிவு திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பதால், யார் தமிழகத்தில் மாஸ் என காண்பிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதே வேளையில், பாடல்களிலும் மாஸ் காண்பித்து வருகின்றனர் இசையமைப்பாளர்கள். 

வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது இசையில் இதுவரை 2 பாடல்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். துணிவு திரைப்படத்தின் பாடல்களில் தனித்துவத்தை காண்பித்திருக்கிறார் ஜிப்ரான். இதுவரை சில்லா  சில்லா  மற்றும் காசேதான் கடவுளடா பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கிளான சோல் ஆஃப் வாரிசு பாடலை வெளியிட இருக்கிறார்கள். முதலில் ரஞ்சிதமே அதைத் தொடர்ந்து தீ தளபதி ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. வரும் டிசம்பர் 24ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறும் என தெரிகிறது. எனினும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்