Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளோவா? அம்மாடியோவ்

UDHAYA KUMAR June 29, 2022 & 20:12 [IST]
விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளோவா? அம்மாடியோவ்Representative Image.

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து AK62 என்றழைக்கப்படும் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார் அஜித். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து தெரியவந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறை விருந்தாக வெளிவரும் என கூறப்படுகிறது. 

அஜித்குமார் 62 படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாய். இதில் அஜித்துக்கு சம்பளம் மட்டும் 105 கோடி ரூபாய்.  விக்னேஷ் சிவனுக்கு 11 கோடியும் நயன்தாராவுக்கு 10 கோடியும் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாம். அனிருத்துக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய்யும், மற்ற டெக்னீசியன்களுக்கு சேர்த்து 10 கோடி ரூபாய்யும் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற செலவுகளுக்கு 9 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த படம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும் என்பதை நேயர்களே முடிவு செய்துகொள்ளட்டும். திரையரங்குகளில் வெளியாகும் படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்