Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லைகர் படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

UDHAYAKUMAR August 25, 2022 & 19:00 [IST]
லைகர் படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?Representative Image.

லைகர் படத்துக்காக இத்தனை கோடி வாங்கியிருக்கிறாரா விஜய் தேவரகொண்டா என திரையுலகமே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. அவர் ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து, படமும் பான் இந்தியா படமாக ரிலீஸாகி, விமர்சனமும் நெகட்டிவாக போய்விட்டதால், கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய் தேவரகொண்டா. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் படம் இன்னும் 400 கோடி வசூலிக்கும் 500 கோடி வசூலிக்கும் என சமூக வலைத்தளங்களில் அடித்து விடுகிறார் என ரசிகர்கள் பலர் கேலி பேசி வருகின்றனர். 

லைகர் படத்தைப் பார்த்தவர்கள் பெரும்பாலும் நெகடிவ் விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர்.  மைக் டைசனை வைத்து காமெடியாக்கி விட்டார்கள் என பலர் குறிப்பிடுகின்றனர்.  

இந்நிலையில்தான், விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் தெரியவந்துள்ளது. லைகர் படத்துக்காக விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம் 25 கோடியாம். இது அவரது முந்தையப் படங்களை விட பல மடங்கு அதிகம் என்கிறார்கள். 

லைகர் படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூலில் சாதித்ததாக கணக்கு காட்டி, அடுத்த படத்துக்கான சம்பளத்தை உயர்த்தி விடுவார் விஜய் என பலரும் பேசி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்