Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

vijay own voice songs இப்ப இல்ல அப்பவே பாட்டுல தளபதி வேற லெவல்! விஜய் குரலில் மெகா ஹிட்டான பாடல்கள் இதோ!

UDHAYA KUMAR June 22, 2022 & 11:02 [IST]
vijay own voice songs  இப்ப இல்ல அப்பவே பாட்டுல தளபதி வேற லெவல்! விஜய் குரலில் மெகா ஹிட்டான பாடல்கள் இதோ!Representative Image.

தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்து, சண்டை தெரிந்து, பாட தெரிந்து ஒரு சில நடிகர்களே மிகப் பெரிய அளவில் ரசிகர்களை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இத்தனை திறமைகள் இருந்தால் நிச்சயம் வெற்றி கைவசப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். கமல்ஹாசனுக்குப் பிறகு இப்படி பல வித்தைகளை தன் வசம் வைத்திருந்த விஜய், ஆரம்ப காலத்தில் பாடி வெற்றி பெற்ற பாடல்களை இந்த பதிவில் காண்போம். 

1 பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி - ரசிகன்

ரசிகன் திரைப்படத்தில் வரும் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடல்தான் விஜய் குரலில் முதன்முறையாக திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த படத்தில் விஜய் ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். இசை தேவா. 

பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே 

2 அய்யய்யோ அலமேலு - தேவா

தேவா படத்தில் இடம்பெற்றுள்ள அய்யய்யோ அலமேலு பாடலும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல்தான். வாலி எழுதிய இந்த பாடலுக்கு இசையமைத்தவர் தேவா.

அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு 
தொட்டு புட்டா கொட்டிவிடும் தேளு...யப்பா 
அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு 
தொட்டு புட்டா கொட்டிவிடும் தேளு....ஆமா 
அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு
தொட்டு புட்டா கொட்டிவிடும் தேளு
அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு 

3 தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா - விஷ்ணு

விஷ்ணு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தொட்டபெட்டா ரோட்டு மேல பாடலும் விஜய் குரலில் பாடி இடம்பெற்றது. இந்த படத்துக்கும் இசை தேவாதான்.  இதில் இடம்பெற்றுள்ள பெண் குரல் விஜய்யின் அம்மா ஷோபாவுடையது. 

தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

4 சிக்கன் கறி சிக்கன் கறி - செல்வா

செல்வா திரைப்படத்தில் விஜய், ஸ்வேதா இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் சிக்கன் கறி சிக்கன் கறி பாடல் விஜய் குரலில் வெளியாகியிருக்கும். 

சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி
இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி

இங்கு எல்லா பக்கமும் ஏசி
குளிர் வந்திடும் கைகளை வீசி
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி
அள்ளி கற்பூர வாசத்த பூசி

5 ஊர்மிளா - ஒன்ஸ் மோர்

விஜய், சிம்ரன், சிவாஜி கணேசன் சேர்ந்து நடித்திருந்த ஒன்ஸ்மோர் படத்தில் இடம்பெற்றுள்ள ஊர்மிளா பாடல் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடலாகும். இந்த படத்துக்கும் இசை தேவா தான். 

ஊர்மிளா ஊர்மிளா
கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா
ஊர்மிளா
உன் கண்ணம் தங்க ஆப்பிளா
ஊர்மிளா

நீ பூத்ததென்ன பூவிலா
தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

6 ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை 

காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விழியில் விழி மோதி பாடல் விஜய் மற்றும் பவதாரணி குரலில் அமைந்திருக்கும். மிகச் சிறப்பான இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். 

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே
ஏ காதல் நெஞ்சே யாரோடு சொல்வேன்
வந்து போன தேவதை
நெஞ்சை அள்ளிப் போனதே
நெஞ்சை அள்ளிப் போனதே

ஓ பேபி பேபி, என் தேவ தேவி
ஓ பேபி பேபி, என் காதல் ஜோதி
ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததெங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்


7 மவுரியா மவுரியா - பிரியமுடன்

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்


8 நிலவே நிலவே - நிலாவே வா

வித்யாசாகர் இசையில் விஜய், அனுராதா ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ள பாடல் நிலவே நிலவே. இந்த பாடல் நிலாவே வா படத்தில் இடம்பெற்றிருந்தது. விஜய் ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார்.  

நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு…சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு….சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு….சொல்லு

9 தம்மடிக்குற ஸ்டைல பாத்து - பெரியண்ணா

ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்
நான் தம் அடிச்சா ஸ்டைல்லுதான்
ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்
நான் ரம் அடிச்சா ஸ்டைல்லுதான்

நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து
கவிதா புள்ள விரும்புச்சு
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து
சின்ன பொண்ணு விரும்புச்சு

10 தங்க நிறத்துக்கு - நெஞ்சினிலே

தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா

தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா

நீ பார்க்கும்
பார்வைக்காக பஞ்சாப்பயே
கேக்கட்டுமா நீ காட்டும்
அன்புக்காக ஆந்திராவயே
கொடுக்கட்டுமா உத்தரவ
சொல்லி புடு ஊட்டி தேசம்
உனக்கு தான்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்