Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதிக்கு பதிலா நடிக்க வேண்டியது அந்த நடிகராம்! நல்ல வேளை நடக்கல

UDHAYA KUMAR May 24, 2022 & 17:14 [IST]
விஜய் சேதுபதிக்கு பதிலா நடிக்க வேண்டியது அந்த நடிகராம்! நல்ல வேளை நடக்கலRepresentative Image.

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்கவிருந்தது வேறொரு நடிகராம். அவருக்கு கால்ஷீட் இல்லாததால் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தாராம். நல்லவேளை அவர் நடிக்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள 4வது திரைப்படம் விக்ரம். தனது ஆஸ்தான நடிகரும் குருவுமான கமல்ஹாசன் அவர்களை வைத்தே  இந்த படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ்.  கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் படம் குறித்து பல யூடியூப் சேனல்களிலும் விளம்பரம் செய்து வருகிறார். புரோமோசன் பணிகளுக்காக திரைப்படம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில்தான், விஜய் சேதுபதி வேடத்தில் முதலில் நடிக்கவேண்டியிருந்தது வேறொரு நடிகர் என தெரிவித்துள்ளர். 

தீவிர ரஜினி ரசிகரான ராகவா லாரன்ஸ்தான் அந்த நடிகர். கமல்ஹாசனுடன் மோதும் காட்சிகளில் அவர் எப்படி நடித்திருப்பார் என கற்பனை செய்து பார்த்து ரசிகர்கள் நல்லவேளை இது நடக்கவில்லை என கமண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள், கமல்ஹாசனுடன் ஒரு காட்சியில் லாரன்ஸ் நடித்திருந்தால் எப்படி வசனம் பேசியிருப்பார் என காமெடியாக பதிவு செய்திருந்தார். 

கமல்ஹாசன் மாஸ் னா நான் பக்கா மாஸ் என வசனம் பேசியிருப்பார் என கேலியாக கமண்ட் செய்து வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதிதான் இந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்பது டிரெய்லர் பாத்த போதே தெரிந்தது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்