Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

சதுரங்கம் தமிழகத்தில் தோன்றியது என்பதற்கு சான்றாக இருக்கும் 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோவில்.!

madhankumar July 29, 2022 & 13:42 [IST]
சதுரங்கம் தமிழகத்தில் தோன்றியது என்பதற்கு சான்றாக இருக்கும் 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோவில்.!Representative Image.

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கவுள்ளது, இதற்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யனாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சினிமா நட்சத்திரங்களான, ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், மற்றும் தமிழக அமைச்சர்கள், செஸ் போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு நாட்டில் இருந்து வந்திருந்த வீரர்கள்/வீராங்கனைகள், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடனங்கள் அரங்கேற்றப்பட்டன, குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம்,  பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த விளையாட்டு போட்டியின் மூலம் தமிழகத்தின் சிறப்பை நாடறிய செய்ய வேண்டும் என்பதற்காக ஆதிகாலத்தில் தொடங்கி தற்போது வரை தமிழகத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் நடிகர் கமல்ஹாசன் குரல் பின்னணியில் அழகாக எடுத்துரைத்து நடித்துக்காட்டி சிறப்பை வெளிப்படுத்தினர்.

சதுரங்கத்தின் வரலாறு:

நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சதுரங்க வல்லபநாதர் கோயில் குறித்து சதுரங்கத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது என இந்த கோவில் கல்வெட்டுகள் உலகிற்கு எடுத்துரைக்கிறது என கூறினார். அதன்படி சதுரங்கம் இந்தியாவில் தோன்றி ஐரோப்பா வரை பரவியதாக கூறப்பட்டாலும், சதுரங்கத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது என தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை பற்றி அறியும் போது,

ஆதிகாலத்தில் வசுனந்தன் என்ற பாண்டிய மன்னனுக்கு பார்வதி தேவி மகளாக பிறந்துள்ளார், மேலும் ராஜேஸ்வரி என்ற பெயரில் அங்கு வளர்த்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த ராஜேஸ்வரி சதுரங்க போட்டியில் மிகவும் வல்லமை வாய்ந்தவர் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ராஜேஸ்வரியை வயதானவர் வேடத்தில் வந்த சிவபெருமான் சதுரங்க போட்டியில் தோற்கடித்துள்ளார், பின்னர் தன திருவுருவத்தை காட்டி ராஜேஸ்வரியான பார்வதியை ஆட்கொண்டார் என வரலாறு கூறுகிறது. மேலும் இந்த கோவிலில் பார்வதியும் சிவனும் சதுரங்கம் விளையாடியதற்கு சான்றாக சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட சிற்பமும் இன்றளவும் உள்ளது.

இப்பெயர் பெற்ற தமிழகத்தில் தன தற்போது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது, இந்நிலையில் சிவபிரான் சதுரங்கம் விளையாடிய வல்லபநாதர் ஆலயத்தை புனரமைத்து, ஆதிகால வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறியும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சதுரங்க விளையாட்டு முதலில் தமிழகத்தில் இருந்துதான் உருவாகியுள்ளது என உலகறிய செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பூவனுர் என அழைக்கப்படும் இந்த கோவிலில் சிவன் சதுரங்கம் ஆடிய சிலை இருந்தாலும் கல்வெட்டுகள் இல்லை என கூறப்படுகிறது. அதே வேளையில், எல்லோரா குகையில் சிவனும், பார்வதியும் சதுரங்கம் போன்ற 'டைஸ்' எனப்படும் 'சொக்கட்டான்' விளையாடுவது சிற்பமாகவே செதுக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்