Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதி, சுந்தர் சி, ஜெய், சிபிராஜ்... வரிசைகட்டும் படங்கள் - இன்று மட்டும் 5 ரிலீஸ்!

UDHAYA KUMAR June 24, 2022 & 11:50 [IST]
விஜய் சேதுபதி, சுந்தர் சி, ஜெய், சிபிராஜ்... வரிசைகட்டும் படங்கள் - இன்று மட்டும் 5 ரிலீஸ்!Representative Image.

மாமனிதன் தொடங்கி பட்டாம்பூச்சி, மாயோன் என மொத்தம் 5 படங்கள் இன்று ரிலீஸாகியுள்ளன. அதில் மாமனிதன், பட்டாம்பூச்சி, மாயோன் ஆகிய படங்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு திரையரங்குகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளதால், அந்த படம் 2 காட்சிகள், இந்த படங்கள் தலா 1 காட்சி எனவும் திரையரங்குகள் வெளியிட்டு வருகின்றன. 

மாமனிதன் 

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி பல வருட தாமதத்துக்குப் பின் ஒருவழியாக இன்று ரிலீசாகிறது மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக, காயத்ரி நடித்துள்ளார்.  குடும்ப திரைப்படமாக இந்த படம் உருவாகியிருப்பதால் குறைந்தபட்ச நம்பிக்கை நிச்சயமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும் என இருக்கிறது. மேலும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி ஆகியோருக்காக திரையரங்குகளுக்கு படையெடுக்கும் மக்களும் இருக்கிறார்கள். 

பட்டாம்பூச்சி

சுந்தர்சி, ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. ஒரு இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் வகையிலான படம் இது. சுந்தர் சி க்கும் ஜெய்க்கும் இடையிலான படமாக இது அமைந்துள்ளது.  பத்ரி நாராயணன் இயக்கத்தில் இந்த படம் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் மாதிரியான திரைக்கதையில் உருவாகியிருக்கிறது.  படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் இருக்கின்றனர். 

மாயோன்

சிபி ராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள திரைப்படமான மாயோன் இன்று ரிலீசாகியுள்ளது.  இசை ஞானி இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கியுள்ளார். 

வேழம்

அஷோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன், ஷ்யாம் சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வேழம். இந்த படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம். 

போலாமா ஊர்கோலம்

நாகராஜ் துரைலிங்கம் இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் போலாமா ஊர்கோலம். ஒரு இன்ஸ்பயரிங் படமாக இது அமைந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்