Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்! விஜயகாந்த் ரீ எண்ட்ரி

UDHAYA KUMAR June 20, 2022 & 19:00 [IST]
வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்! விஜயகாந்த் ரீ எண்ட்ரிRepresentative Image.

தனது தனித்துவமான வசனம், நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்ட விஜயகாந்த், பின்னாளில் அரசியலுக்கு வந்து லைம்லைட்டிலிருந்து காணாமல் போனார். ஆனால் இன்றும் அவரின் புகழைப் பற்றி பலரும் பேசி வருகின்றனர். அவரின் கொடை உள்ளம், நல்ல மனம் என பலரும் பாராட்டி வரும் அவரை, விரைவில் வெள்ளித்திரையில் நாம் காணப்போகிறோம். 

ரமணா, சத்ரியன், வாஞ்சிநாதன், வல்லரசு என பல படங்கள் அவருக்கு தனித்தன்மையாய் அமைந்திருந்தன.  உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். 

இந்நிலையில்தான், விஜயகாந்த், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள் என தெரிகிறது.  விஜய் மில்டன் இயக்கும் புதிய படமான மழை பிடிக்காத மனிதனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜயகாந்த். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்