Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vikram 500cr ரூ.500 கோடியை நெருங்கும் விக்ரம் வசூல்! பாக்ஸ் ஆபிஸ் சரவெடி!

UDHAYA KUMAR June 21, 2022 & 15:30 [IST]
Vikram 500cr ரூ.500 கோடியை நெருங்கும் விக்ரம் வசூல்! பாக்ஸ் ஆபிஸ் சரவெடி!Representative Image.

பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எதைத் திறந்தாலும் விக்ரம் பற்றிய பேச்சுத்தான். கமல்ஹாசன் 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து 2,3 காட்சிகள் பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். 

படத்தின் கதையம்சம், எடுக்கப்பட்ட விதம், சஸ்பென்ஸ் என பல விசயங்கள் ரசிகர்களை படத்தை நோக்கி வரவழைத்துள்ளது. மேலும் சூர்யாவும் இந்த படத்தில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் 100 கோடி, 200 கோடி என சாதனை செய்யத் துவங்கி இப்போது 500 கோடியை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.  

தமிழகத்தில் 200 கோடியை நெருங்கும் வசூல், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபீஸையும் அடித்து நொறுக்கியுள்ளது. எதிர்பார்த்த அளவு ஹிந்தி பெல்ட்டில் படம் சரியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் உலக அளவில் கமல்ஹாசன் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

படம் ஜூன் 3ம் தேதி வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்து 3 வாரங்களாக ஹவுஸ் ஃபுல் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுக்க நன்றாக ஓடி, வரும் வார இறுதியிலும் படம் நிலையாக ஓடும்பட்சத்தில் விரைவில் 500 கோடி வசூலை அடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தின் வெற்றி அறிவிப்பு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என பயணம் செய்து சிறப்பித்தனர். 

விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளதாகவும், கமல்ஹாசன் மகேஷ் நாராயணனுடன் சேர்ந்து பணிபுரியவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்