Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு டிரைலரால் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்.. ஏன் என்ன ஆச்சு?

UDHAYA KUMAR Updated:
வாரிசு டிரைலரால் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்.. ஏன் என்ன ஆச்சு?Representative Image.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூவின் மிகப்பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது வாரிசு படத்தின் டிரைலர். விஜய் நடிப்பிலேயே அதிக பில்டப்புகளுடன் வெளியாகும் இந்த படம் ஆரம்பத்திலிருந்தே விஜய் ரசிகர்களுக்கு பிடித்ததாக இல்லை. ஆனா் ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்களின் மூலம் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால் டிரைலர் மூலம் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து காணப்படுகிறது விஜய் ரசிகர் படை. 

வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது என்பதால் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்தின் டிரைலரைப் பார்த்து விஜய் ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர். 

வாரிசு டிரைலரால் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்.. ஏன் என்ன ஆச்சு?Representative Image

அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!

வாரிசு VS துணிவு போட்டியில் இப்போதைக்கு துணிவு படமே அதிக வெற்றி வாய்ப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் போல மீண்டும் படுதோல்வியைச் சந்திப்பார் தளபதி விஜய் என ரசிகர்களே பேசி வருவது சக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் ஆறுதல் கூறுவது போன்ற நிகழ்வுகளும் நடந்தேறிவருகின்றன. 

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வரை அறிவிக்கப்படாததால் மற்ற ரசிகர்களும் கடுப்பாகி இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்