Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தியேட்டர் மட்டுமில்ல ஓடிடியிலும் வேற லெவல் சாதனை செய்த விக்ரம்!

Udhaya Kumar July 13, 2022 & 17:57 [IST]
தியேட்டர் மட்டுமில்ல ஓடிடியிலும் வேற லெவல் சாதனை செய்த விக்ரம்!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக ஒரு படம் தினமும் 1 அல்லது 2 ஷோக்கள் ஓடுவது பல ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 

விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பும் அதிக அளவில் பாராட்டப்பட்ட இந்த படம் கடந்த ஜூலை 8ம் தேதி ஓடிடியில் ரிலீஸானது. 

திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும்போது இருக்கும் அதே எதிர்பார்ப்பு இம்முறை ஓடிடி ரிலீஸூக்கும் இருந்தது. திரையரங்குகளில் பார்த்தவர்களும் புதிதாய் பார்க்க காத்திருந்தவர்களும் படம் வெளியான ஜூலை 8ம் தேதி காலையிலேயே படத்தைப் பார்த்து முடித்து விட்டனர். அந்த வார இறுதிக்குள் விக்ரம் திரைப்படத்தால், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் இன்ஸ்டால், சப்ஸ்கிரிப்சன் பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவில் வாட்ச் டைம் கொண்ட திரைப்படங்களில் முதல் இடத்தைப் பிடித்துவிட்டது விக்ரம் திரைப்படம். வெறும் 3 நாட்களிலேயே பலரும் படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். பைரஸி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் அவை டவுன்லோடு செய்யப்பட்டு நியாயமற்ற முறையில் பார்க்கப்படுவதால், அதுகுறித்த தகவல்கள் வெளிவராது. ஆனால் இம்முறை பைரஸியிடமிருந்து முடிந்த வரை விக்ரம் காப்பாற்றப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்