Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vikram Review Tamil: உலகநாயகனின் அதிரடியான நடிப்பில் வெளிவந்த விக்ரம்...! திரையில் வெடிக்கும் கைத்தட்டல்... ஆரம்பிக்கலாமா...!

Manoj Krishnamoorthi June 03, 2022 & 08:24 [IST]
Vikram Review Tamil: உலகநாயகனின் அதிரடியான நடிப்பில் வெளிவந்த விக்ரம்...! திரையில் வெடிக்கும் கைத்தட்டல்... ஆரம்பிக்கலாமா...!Representative Image.

திரைத்துறையில் அனுபவத்தைவிடத் திறமையான கையாடலே அவசியம் என்பதை தன் திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்திய இயக்குநர் லோகஷ் கனக ராஜின் இயக்கத்தில் வெற்றி நடைபோட்ட  மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்பட வெற்றியில் தற்போது திரையில் ஜோலிக்கும் திரைப்படம் விக்ரம். 

உலகநாயகன் மற்றும் லோகஷ் கனகராஜ் கூட்டணியில் ஜூன் 3, 2022 உலகமெங்கும் பிரமாண்டமாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் விமர்சனம் பற்றி அறிய எங்கள் பக்கம் சரியான தீர்வாகும்.

கதைக்களம் (Storyline- Vikram Review Tamil)

வாழ்வில் நேர்மையாக இருந்தால் இழப்புகள் அதிகம் என்பது மறுக்கப்படாத உண்மைதான், அதுவும் உத்தியோகத்தில் நேர்மையாக இருந்தால் இழப்பு குடும்பத்தில் என்பதைக் கதையின் கதைக்களத்தின் ஆரம்பப்புள்ளியாக வைத்தே விக்ரம் திரைப்படத்தின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும்.

போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்கப் புறப்படும் நேர்மையான கதாநாயகன் என்ற வழக்கமான கதைக்களம்.

கதாபாத்திரம் (Vikram Movie Review- Movie Cast)

நேர்மையான காவல் அதிகாரி- கமலஹாசன்

தந்திரமான ஊழல் ஊறிய அதிகாரி- ஃபகத் ஃபாசில்

போதைப் பொருள் சாம்ராஜ்ஜிய அதிபதி- விஜய் சேதுபதி

கதையில் எதிர்பார்த்த முடிச்சின் மர்மமான கதாபாத்திரத்தில் சூர்யா.

திரை விமர்சனம்  ( Vikram Review Tamil)

அனைத்து அரசு அதிகாரியும் தன் கட்டுப்பாட்டில் வைத்து போதைப் பொருள் வியாபாரத்தை வெளிப்படையாக பிரம்மாண்டமாக நடத்தும் விஜய் சேதுபதி மற்றும் அவரின் விஸ்வாசமான அதிகாரிபோல் நடிக்கும் ஃபகத் இருவரின் நோக்கிக் கதை தன் வேகத்தைத் தொடங்குகிறது.

தந்திரமாகக் காய் நகர்த்தும் ஃபகத் சுதாரித்த விஜய் சேதுபதி, இதனால் நடக்கும் நிகழ்வு கதாநாயகன் கமலஹாசனை இவர்களின் வாழ்வில் நுழைக்கிறது.

வழக்கமான ஹீரோ வில்லனை அழிக்கும் கதை என்றாலும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகளுடன் அமைத்து இருப்பது பார்வையாளரைக் கவர்ந்திருப்பது சிறந்த இயக்கம் ஆகும். சண்டைக் காட்சிக்கு ஏதுவான பின்னணி இசை இருப்பது, மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது.

சூர்யாவின் கதாபாத்திரத்தில் இருக்கும் , ஆவல் அடுத்த பாகத்தின் விதையாக  அமைகிறது.

திரைக்கதை- 4/5

கதை- 3/5

ஒளிப்பதிவு- 4/5

ஆக்‌ஷ்ன்- 3.5/5

இசை- 3.5/5

இயக்கம்- 3.75/5  

மொத்தத்தில் கமலின் திரைப்பயணத்தில் கமர்சியல் ஹீரோ கமலின் கம் பேக்காக இருக்கும். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

TAG: Vikram review tamil, Vikram movie review tamil, Kamal vikram movie review, vikram new movie review tamil, vikram new movie review, KAMAL VIKRAM MOVIE REVIEW IN TAMIL, kamal haasan vikram movie tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்