Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yaanai 2022 Movie Review in Tamil: அதிரடி  இயக்குநர் ஹரியின்  இயக்கத்தில் மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர்..... யானை திரைப்படத்தின் விமர்சனம்..!

Manoj Krishnamoorthi July 01, 2022 & 13:35 [IST]
Yaanai 2022 Movie Review in Tamil: அதிரடி  இயக்குநர் ஹரியின்  இயக்கத்தில் மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர்..... யானை திரைப்படத்தின் விமர்சனம்..!Representative Image.

சாமி, கோவில், ஆறு, வேல், சிங்கம், பூஜை என வரிசையாக அக்ஷ்ன்  ஜார்னலில் கொடிகட்டி பறக்கும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் மீண்டும்  திரையில் பிளிறும் 'யானை' திரைப்படத்தின் விமர்சனத்தைக் காண்போம்.

ஆக்ஷனில் வேறலெவலில் மிரட்டியிருக்கும்  அருண் விஜய் மற்றும் பார்வையால்  நம்மை ஈர்க்கும் பவானி சங்கர் கூட்டணியில் வ்ர்ளிவந்த 'யானை' படம் ரசிகர் காமர்சியல் விருந்தா... இல்லை வழக்கமான ஹரியின் ஃபார்முலாவில் வந்த ரிலீஸா..... என்பதைக் காண்போம்.

கதைக்களம் (Yaanai 2022 Movie Review in Tamil)

குடும்பத்துடன் அமைதியாக வாழும்  கதாநாயகன், இரண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழும் பீ.ஆர். வீ குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத மரணம். இந்த மரணத்தால் இரு குடும்பத்துக்கும் ஏற்படும் பகையின் போக்குதான் 'யானை' திரைப்படத்தின்  கதைக்களம் ஆகும்.

திரை விமர்சனம் (Yaanai Movie Review Tamil)

இயக்குநர் ஹரியின் திரைக்கதை என்றால்  வேகம் மற்றும் விறுவிறுப்புக்குக் குறைவே இருக்காது அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலை 1, 2022 திரையில் வெளிவந்த "யானை" திரைப்படம் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது. 

கதையின் நாயகனான அருண் விஜய் (Yaanai Movie Arun Vijay) அவர்களின் நடிப்பு கதையை முழுமையாகத் தாங்கிக் கொள்வது படத்துக்கு ஒரு பலமாகும், முக்கியமாக ஆக்‌ஷன் காட்சியில் நம்மை அசர வைக்கும் வண்ணம் ஹரி படத்துக்கு தேவையான ஆக்ரோஷமான மாஸ் எலிமெண்டையை தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.  நம்ம வீட்டு பொன்னு மாதிரியான எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்தை நம் மனதில் நிறுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

ஹரி படத்தின் விறுவிறுப்பு தான் இசை சளைத்தது இல்லை என்னும் வண்ணம் தன் அசுரத்தனமான இசையால் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார் ஜீ.வீ. பிரகாஷ். படத்தின் ஆணித்தரமான செண்டிமெண்ட் என்றால் தங்கச்சி செண்டிமெண்ட் ஆகும், அதில் தன் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி நம் மனதை வருடியுள்ளார் அம்மு அபிராமி.

ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என்று சினிமாவின் அனைத்து அத்தியாவசிய எலிமெண்ட் இருந்தாலும் வழக்கமான கதைக்களம் சற்று எதிர்ப்பார்வை உருவாகுவதில் சரிந்துள்ளது. வழக்கமான ஹரி திரைப்படத்தின் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் எதிர்பார்க்கக் கூடிய கதை புதியதாக எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்காமல் இருந்தது கொஞ்சம் ஏமாற்றமாக தான் உள்ளது.

திரைக்கதை: 3.75/ 5

கதை: 3/ 5

ஆக்‌ஷன்: 4/5

இசை: 3/5

செண்டிமெண்ட்: 3.5/ 5

ஒளிப்பதிவு: 4/ 5

குடும்பத்துடன்  சந்தோஷமாக பொழுதைக் கழிக்க ' யானை' திரைப்படம் ஒரு பக்கா கமர்சியல் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகும்.      

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்