Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இன்னும் ஓராண்டுக்குள்..! பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடிப் பேட்டி..!!

Saraswathi Updated:
இன்னும் ஓராண்டுக்குள்..! பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடிப் பேட்டி..!!Representative Image.

அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்,  இன்னும் ஓராண்டுக்குள் தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே எஞ்சி இருக்கக் கூடிய நிலை ஏற்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 53 ஆண்டுகளுக்குமுன் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய 3 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அவர்களின் 54வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபியில்  பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பைசா மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் திமுக ஆட்சி காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது கலைஞர் துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் வராமல் பூக்களா வரும் என கேள்வி எழுப்பினார். அப்போது இருந்த திமுகவும் இப்போது இருந்த திமுகவும் இன்னும் மாறாமல் அதே நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இலவச மின்சாரத்தை பாரதிய ஜனதா எப்போதும் ஆதரிக்கிறது. பாரத பிரதமர் மோடி அதனை ஒருபோதும் கைவிட மாட்டார். ஏனென்றால் விவசாயம் முக்கியமானது என்பதை பாஜக அறிந்திருக்கிறது.  

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெருமாநல்லூரைச் சேர்ந்த மூன்று விவசாயிகள் மட்டுமல்லாது வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு போராட்டங்களில் உயிர் நீத்த  46 விவசாயிகளுக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். ஜூலை ஒன்பதாம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட உள்ள நடைபயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட இருக்கிறோம்.  பாஜக கள்ளுக் கடைகளை முழுவதாக ஆதரிக்கிறது.  அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இந்த அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது. பனைமரம் மற்றும் தென்னை மரங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகளை அதில் வெளியிட இருக்கிறோம். வெறும் அறிக்கைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தும் வகையில் பாஜக செயல்படும்.  

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு, பீகாரில் இருந்து எல்லாரும் பிழைப்பு தேடி தமிழகம் வருவதாகவும், அதுபோலதான் ஆளுநரும் வந்திருப்பதாக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். ஆனால், நாளைய தினம் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்வரைத்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இதன் மூலம் திராவிட மாடல் அரசின் இரட்டை வேடம் தெரியவருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறார். இன்னும் ஓராண்டிற்குள் தமிழக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.  ஆனால், முதல்வர் மீதும் சிபிஐ-யில் புகார் அளித்திருக்கிறேன்.  

நாம் தமிழர் கட்சியும் பாஜகவும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஒரே கோட்டில் பயணிப்பதாகவும் , பாஜகவில் இதுவரை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருந்திருக்கிறார்கள்.  தற்போதும் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.  இவர்களில் யாரேனும் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். பாஜகவில் அனைத்து மட்டத்திலும் ஊழல் அற்றவர்கள்தான் பதவியில் இருக்கிறார்கள்.   

இவ்வாறு அவர் பேசினார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்