Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜனாதிபதியை இழிவுபடுத்திய காங்கிரஸ்.. முஷ்டி முறுக்கும் பாஜக!!

Sekar July 28, 2022 & 13:15 [IST]
ஜனாதிபதியை இழிவுபடுத்திய காங்கிரஸ்.. முஷ்டி முறுக்கும் பாஜக!!Representative Image.

ஜனாதிபதி திரௌபதி முர்முவை காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஷ்டிரபத்னி என்று கூறியதற்கு எதிராக பாஜகவின் கடுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கண்டன. 

காங்கிரஸின் மக்களவைத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டங்க் ஸ்லிப்பாகி இவ்வாறு கூறிவிட்டதாகவும், இதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டார். ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் திரௌபதி முர்முவை வேண்டுமென்றே இழிவுபடுத்துவதாகவ பாஜக குற்றம் சாட்டியது. ஸ்மிருதி இரானி கூறுகையில், "முர்முவையும் அவரது பதவியையும் இழிவுபடுத்துகிறது மற்றும் இந்தியாவின் மதிப்புகளுக்கு எதிரானது என்பதை சவுத்ரி நன்கு அறிந்தே அந்த வார்த்தையை பயன்படுத்தினார். புதிய வரலாற்றை உருவாக்கிய ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண் தொடர்ந்து காங்கிரசால் இழிவுபடுத்தப்படுகிறார். இதற்காக ஜனாதிபதி மற்றும் நாட்டிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று கூறினார்.

லோக்சபாவில் காங்கிரஸின் தலைவரான சவுத்ரி, பல பிரச்சனைகள் தொடர்பாக தனது கட்சி நடத்திய போராட்டங்களின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தை பயன்படுத்தினார்.

பிஜேபி தலைமையிலான என்டிஏ தனது ஜனாதிபதி வேட்பாளராக முர்முவை அறிவித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர்ந்து முர்முவை குறிவைத்து வருவதாக இரானி குற்றம் சாட்டினார். மேலும் முர்முவை பொம்மை என்றும் தீமையின் சின்னம் என்றும் காங்கிரஸார் பேசியதாகவும் அவர் கூறினார். 

நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவிக்கு முர்மு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து வரும் இந்த தாக்குதல்கள் நிற்கவில்லை என்றும், சவுத்ரியின் கருத்து, முர்மு பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடி மரபையும், கடின உழைப்பின் மூலம் உயரும் ஏழைகளையும் இழிவுபடுத்துவதாக உள்ளது என்றும் கூறினார். 

குடியரசுத் தலைவர் இந்தியில் ராஷ்டிரபதி என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதியான முர்மு, போராட்ட வாழ்க்கையை நடத்தியவர் மற்றும் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை நாட்டின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றும் கூறிய இரானி, அதன் தலைவர் சோனியா காந்தியின் கீழ் காங்கிரஸ் தொடர்ந்து பெண்களை குறிவைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்காக காங்கிரஸை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாஜக போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளது.

மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை

இதற்கிடையில் போராட்டத்திற்கு பதிலளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. ராஷ்டிரபத்னி என்று தவறாக கூறிவிட்டேன், அதற்காக என்னை தூக்கிலிட நினைத்தால் உங்களால் முடியும்." என்று கூறிவிட்டார்.

ஏற்கனவே மன்னிப்பு கேட்கப்பட்டது

இதற்கிடையில், ராஷ்டிரபத்னி கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்பாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறினார். 

இந்நிலையில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார் என சோனியா காந்தியும் முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்