Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்: மத்திய இணை அமைச்சர் தகவல்...!

Baskaran Updated:
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்: மத்திய இணை அமைச்சர் தகவல்...!Representative Image.

வேலூர்: கடந்த 9 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளைக் காட்டிலும் முதலிடத்தில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் அடைந்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்தார்.

வேலூரில் மத்திய பாஜக ஆட்சியில் 9 ஆண்டுகால சாதனை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்: மத்திய இணை அமைச்சர் தகவல்...!Representative Image

அப்போது பேசிய அவர்,

இந்தியா நாட்டின் வளர்ச்சி சமூக பாதுகாப்பு அரசியல் வளர்ச்சி ஆகியவற்றில் கடந்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

உள்நாட்டின் தயாரிப்புகளைக் கொண்டே நம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இது போன்றவளர்ச்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை. கொரோனா தொற்று காலத்திலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்து இருந்தது.

இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மூன்று கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதே போன்று ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பைப்புகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்: மத்திய இணை அமைச்சர் தகவல்...!Representative Image

ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள் கொண்டுவரப்பட்டு ஒரு நாளைக்கு புதிதாக 38 கிலோமீட்டர் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றது. 

இந்த சாலை வசதியில் உலகத்திலே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்தில் வரும். 2014 ஆம் வெறும் 74 விமான நிலையங்களே இருந்தது இப்பொழுது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.

உலகத்திலே இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா வகிக்கிறது. இந்தியாவில் இருந்து உலகமெங்கும் சென்று சாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வேலூரில் உள்ள சிறிய விமான நிலையம் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ்
மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் விமானங்கள் இயக்க அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்