Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்னிபாத் திட்டம் செம சூப்பர்.. காங்கிரஸ் எம்பி திடீர் ட்விஸ்ட்!!

Sekar June 29, 2022 & 12:17 [IST]
அக்னிபாத் திட்டம் செம சூப்பர்.. காங்கிரஸ் எம்பி திடீர் ட்விஸ்ட்!!Representative Image.

மோடி அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவான மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான மணீஷ் திவாரியின் நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்டது. திவாரியின் கருத்துக்கள் முழுக்க முழுக்க தனிப்பட்டவை என்றும் கட்சி சார்ந்தவை அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரி வரும் காங்கிரஸ், இது தேசப் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் இளைஞர்களுக்கு எதிரானது என்று வர்ணித்தது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், "அக்னிபாத் குறித்து அகில இந்திய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். காங்கிரஸ் மட்டுமே ஜனநாயகக் கட்சி என்றாலும், அவருடைய கருத்துக்கள் முழுக்க முழுக்க அவருடைய சொந்தக்கருத்து மற்றும் அது கட்சியின் கருத்து அல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன். அக்னிபாத் தேசப் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கு எதிரானது. எந்தவிதம் விவாதமும் இல்லாமல் புல்டோசர் செய்யப்பட்டது." என்று கூறியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷுக்கு ட்விட்டரில் பதிலளித்த திவாரி, "ஜெய்ராம் ரமேஷ் ஜி கடைசிவரை சரியாகப் படித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பித்துள்ளார்.

புதிய அக்னிபாத் திட்டம் நல்லது தான் என்றாலும், அதில் சில சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள திவாரி, அதே நேரத்தில் ஆயுதப்படைகள் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து பீகார், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

அக்னிபாத் திட்டமானது 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் சேர்த்து 25 சதவீதத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது. பின்னர், அரசாங்கம் 2022 இல் ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக நீட்டித்தது மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெவ்வேறு துறைகளில் ஒதுக்கீட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்