Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை.. உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Sekar September 30, 2022 & 14:14 [IST]
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை.. உச்சநீதிமன்றம் உத்தரவு!!Representative Image.

அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இடையே மோதல்கள் நீடித்து வருகின்றன.

இதில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துக் கொண்டு அவர் ஒரு பக்கம் செயல்படும் நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்ஸும் ஒருபக்கம் செயல்பட்டு வருகிறார். 

அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு தசரா விடுமுறைக்கு பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் இபிஎஸ் தரப்பு இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்த முயற்சிப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்