Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"நாவடக்கத்துடன் பேச வேண்டும்" - அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Saraswathi Updated:
Representative Image.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் நாவடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான அண்ணாமலை கருத்து குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். அப்போது, பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று ஒருபோதும் பேசியது இல்லை. அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஒரு மாநில தலைவராக இருப்பதற்கு கொஞ்சம்கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர்ஜெயலலிதா குறித்த அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார்.   அண்ணாமலையின் இந்த செயல்பாடு அதிமுக-பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல உள்ளது. கூட்டணி தர்மப்படி இல்லாமல் அண்ணாமலை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்ற எண்ணத்திலேயே அண்ணாமலை செயல்படுவதுபோல் தெரிகிறது. அண்ணாமலையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் கண்டிக்க வேண்டும். அண்ணாமலை கர்நாடகா சென்ற ராசி அம்மாநிலத்தில் பாஜக தோற்றுவிட்டது. தமிழக சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களாக பாஜகவால் நுழைய முடியவில்லை. அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்ந்தால், பாஜக கூட்டணியை அதிமுக மறுபரிசீலை செய்ய நேரிடும்.

எங்கள் (அதிமுக) கூட்டணியில் இருப்பதால்தான் தமிழகத்தில் பாஜகவுக்கு அடையாளம் இருக்கிறது. அண்ணாமலையின் பேச்சால் 2 கோடி அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். அண்ணாமலைக்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் பேசியதில்லை. மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்ததை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியலில் அதிமுக ஆலமரம். பாஜக வெறும் செடி. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால்கூட 30 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனைக் கடிக்கும் கதையாக இருக்கிறது அண்ணாமலையின் செயல்பாடுஅதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. சட்டசபையில் 4 பாஜக ஏம்.ஏல்..க்கள் உள்ளதற்கு காரணம் அதிமுகதான். கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிப்பது நல்லது. இல்லையென்றால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்