Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'பொறுப்புள்ள அமைச்சருக்கு அழகல்ல' - அமித்ஷா கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி! | MK Stalin vs Amith Shah

Saraswathi Updated:
'பொறுப்புள்ள அமைச்சருக்கு அழகல்ல' - அமித்ஷா கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி! | MK Stalin vs Amith ShahRepresentative Image.

தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்ற கருத்தை வரவேற்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,  மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் தண்ணீர் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

நடப்பாண்டில் குறுவை நெல் தொகுப்பு திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுவை நெல் சாகுபடி 5 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக இருக்கும்.  குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது. திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுவை நெல் தொகுப்பு திட்டத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும். பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி தேவையான இடுபொருட்களை இட்டு சாகுபடி செய்ய வேண்டும். 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புவது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்று விமர்சித்தார். கடந்த ஆட்சியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் அந்த புத்தகப் பைகள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை மாணவ மாணவிகளுக்கு வழங்கியதாகவும் முதலமைச்சர் கூறினார்.  

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற கருத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதாகக் கூறினார். மேலும்,  அமித்ஷாவிற்கு மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.  தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் தமிழிசை மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

ஊழல் குறித்து காங்கிரஸ் -திமுக கூட்டணியை விமர்சிக்கும் பாஜக, ரஃபேல் ஊழல் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அப்போது அவர் பதில் அளித்தார். திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவைப்படவில்லை என்றும், மருத்துவமனையை அறிவித்தது பாஜக அரசுதான். எனவே, இந்த விவகாரத்தில் திமுக பதிலளிக்க வேண்டும் என்று பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது அழகல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்