Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய நாடாளுமன்றத்தில் உள்ள இந்திய மேப்பால் வெடித்த சர்ச்சை.. | Akhand Bharat Mural

Nandhinipriya Ganeshan Updated:
புதிய நாடாளுமன்றத்தில் உள்ள இந்திய மேப்பால் வெடித்த சர்ச்சை.. | Akhand Bharat MuralRepresentative Image.

வளர்ந்த வரும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன வசதிகளுடன் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 தளங்கள் கொண்ட முக்கோண வடிவத்திலான புதிய நாடாளுமன்றத்தை கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். 'ஜனநாயக கோயில்' என்று அழைக்கப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், சுவர் ஓவியங்கள், கற்சிற்பங்கள், உலோக பொருட்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,, 6 நுழைவாயில்களும் உள்ளன. இங்குள்ள சுவர் ஓவியங்களில் 'அகண்ட பாரதம்' [பிரிக்கப்படாத இந்தியா] வரைபடமும் உள்ளது.

இந்த அகண்ட பாரதம் என்ற வரைபடத்தில் நேபாளத்தின் லும்பினி, கபில்வஸ்து ஆகிய பகுதிகல் இந்தியாவில் இணைந்துள்ளதாக வெளியான அறிக்கைகள் மீது நேபால அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் இணைந்துள்ள நேபாள பகுதிகள் தொடர்பான விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது, விரைவில் இதற்கான தீர்வு எடுக்கப்படும் என நேபாளத்தின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சக்தி பகதூர் பாஸ்நெட் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நேபாளம் நாட்டை எதன் அடிப்படையில் இந்திய வரைபடத்துடன் இணைக்க முடியும்? என நேபாள நாட்டு பிரதமரிடம் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.

இதற்கிடையே, நேபாள பிரதமர் பிரசந்தா, அரசு முறை பயணமாக நேற்று (மே.31) இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் வந்துள்ள அவர் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இணைந்துள்ள நேபாள பகுதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்