Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தி கத்துக்கிட்டா என்ன தப்பு?... தமிழக இளைஞர்களை வடமாநிலத்திற்கு போகச் சொல்லும் சரத்குமார்! 

KANIMOZHI Updated:
இந்தி கத்துக்கிட்டா என்ன தப்பு?... தமிழக இளைஞர்களை வடமாநிலத்திற்கு போகச் சொல்லும் சரத்குமார்! Representative Image.

எந்த மொழியை வேண்டுமானாலும் ஒருவர் கற்றுக்கொள்ள உரிமையுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 


சென்னை ராஜரத்தினம் அரங்கத்தின் அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்கள் ஒழித்திடவும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது அப்போது மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், 25 சதவீத மக்கள், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்

மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்  சுகாதாரம்மற்ற சூழலில் மக்கள் வாழ்கிறார்கள் . பெற்றோர்கள் பாசத்தை செலுத்துவதால் தான் குழந்தைகள் கெட்டு போகிறார்கள் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்  . மதுவிலக்கு சாத்தியமா என கேட்டால் கஷ்டம் தான், ஏனெனில் அதில் இருந்து  36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. நடக்காது என்பதற்காக அதை தொடர முடியுமா?

 

மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம். மது சுகாதார சீர்கேடாக உள்ளது பூரண மதுவிலக்கு கனவாக இருந்தாலும் அதற்கு விதை விதைக்க வேண்டும் .அந்த அடிப்படையில் தான் மதுவிலக்கு வேண்டி போராட்டாம் நடைப்பெற்றது. போதையின் காரணமாக தன்னிலை மறந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்து ஏற்படுகிறது.கஞ்சா, பவுடர் அதிகமாக எளிதா கிடைப்பதால் மது விற்பனை குறைந்துவிட்டதாக கூறுகின்றனர்.

பாதள சாக்கடை திட்டம் அனைத்து வீடுகளுக்கும் கழிவறையை கட்டித்தர வேண்டும். யாருடன் கூட்டணி என கேட்கிறார்கள், 
தேர்தல் முக்கியம் அல்ல மக்கள் தான் முக்கியம் சமத்துவ மக்கள் கட்சியினர் போதைப்பழக்கத்திற்கு  எதிராக விழிப்புணர்வு தொடர்ந்து செய்ய வேண்டும். 

நம்முடைய வேலை வாய்ப்பு பறிபோகிறது நம்முடை இளைஞர்கள் வட நாட்டில் வேலை செய்ய முடியுமா?... முடியாது ஏன் என்றால் நமக்கு இந்தி தெரியாது.  இந்தியை கற்றுக்க கூடாது என கூறிவருகின்றனர். 
தொடர்பு கொள்வதற்கு  எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்  எனத் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்