Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெரியார் மண்ணை விட்டு பிரிவது வருத்தம்.. ராகுல் காந்தி பேச்சு!!

Sekar September 11, 2022 & 12:49 [IST]
பெரியார் மண்ணை விட்டு பிரிவது வருத்தம்.. ராகுல் காந்தி பேச்சு!!Representative Image.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று கேரளாவில் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பாரத் ஜோடோ யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே ராகுல் காந்தி தொடங்கினார்.

மொத்தம் 150 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி மொத்த 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் தனது யாத்திரையை நிறைவு செய்கிறார். அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் உடன் செல்கின்றனர்.

நேற்று மாலை கேரள எல்லையான தலைச்சன்விளையில் தனது யாத்திரையின் தமிழக பகுதியை நிறைவு செய்து பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் பெரியார் மண்ணை விட்டு பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தாலும், இனி நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்லவிருப்பதை எண்ணி மகிழ்கிறேன் என்றும், தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்