Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

முதல்வர் ஸ்டாலினின் செயலால்.. ஒரு தமிழனாக பெருமையடைகிறேன்.. அண்ணாமலை நச்!!

Sekar July 29, 2022 & 10:41 [IST]
முதல்வர் ஸ்டாலினின் செயலால்.. ஒரு தமிழனாக பெருமையடைகிறேன்.. அண்ணாமலை நச்!!Representative Image.

தமிழக அரசு மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு தமிழனாக முதல்வர் ஸ்டாலினின் செயலால் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜகவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. மேலும் கோ பேக் மோடி ஹேஸ்டேக் போடுவது மற்றும் கருப்பு பலூன் பறக்கவிடுவது என தொடர்ந்து எதிர்ப்பை பதிய வைத்து வந்தனர்.

திமுகவின் எதிர்ப்பு ஒரு கட்டத்தில் விமர்சனத்திற்குள்ளானபோது, மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் எனக் கூறி அதிரடி காட்டினார். ஆனால் தற்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், மத்திய அரசிடம் இணக்கமாக போக வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் தற்போது செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கோடி, பலூன் விடுவது போன்ற சேட்டைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என கட்சியினருக்கு கடும் உத்தரவு பிறப்பித்திருந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் உச்சகட்டமாக மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து போடுபவர்கள் கண்காணிக்கப்படுவதாக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது திராவிட ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகள் என பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்துக்கு தேவையான நிதி வேண்டுமானால் மத்திய அரசிடம் நெளிவு சுழிவோடு நடந்துகொள்ள வேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஏற்பாடு செய்த விதம் தொடர்பாக திமுக அரசை தொடர்ந்து எதிர்த்து வரும் அண்ணாமலை பாராட்டி பேசியுள்ளது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக தமிழக அரசு நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்குப் பின்னர் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "ஜன சங்கம் காலம் தொட்டு பாஜகவில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இங்கே வந்து பிரதமரை சந்தித்தனர். தற்போது தேர்தல் எதுவும் இல்லை என்பதால் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை" என்றார்.

அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருடன் காட்டிய இயக்கத்தால், திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டா என அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "பாஜக ஒரு சித்தாந்த ரீதியான கட்சி. தன்னுடைய சித்தாந்தத்தை பாஜக எப்போதும் மாற்றிக்கொள்ளாது. கடந்தமுறை பிரதமர் சென்னை வந்தபோது, முதல்வர் நடந்துகொண்ட விதம் குறித்து நானே விமர்சித்திருந்தேன்.

ஆனால், இப்போது முதல்வரை நானே மனதார பாராட்டுகிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது. முதல்வரின் செயலுக்கு எங்களின் பாராட்டுக்கள். இதற்காக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக பாஜகவின் தனிப்பட்ட பாராட்டுக்கள். 

ஆனாலும் ஒரு நிகழ்ச்சியை நன்றாக நடத்தியுள்ளார்கள் என்பதை பாராட்டியதற்காக கூட்டணி என்பதெல்லாம் கிடையாது. கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் மற்றும் செயலில் முதல்வராக நடந்துகொண்டார். இதனால் ஒரு தமிழனாக நாம் பெருமைப்பட்டோம்" என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்