Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போஸ்டர் சர்ச்சை.. அண்ணாமலை பிஏ அதிரடி கைது.. பரபரப்பில் பாஜக!!

Sekar September 22, 2022 & 11:56 [IST]
போஸ்டர் சர்ச்சை.. அண்ணாமலை பிஏ அதிரடி கைது.. பரபரப்பில் பாஜக!!Representative Image.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீஸ் கைது செய்துள்ளது பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து ஊடகம் ஒன்றின் அட்டைப்படத்தில் கார்ட்டூனாக வெளியிடப்பட்டு இருந்தது. கிண்டல் தொனியில் இருந்த இந்த அட்டைப்படம் வைரல் ஆன நிலையில், பாஜகவினர் இந்த புகைப்படத்தை எடிட் செய்து முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில் மாற்றி, சென்னை முழுவதும் போஸ்டராக ஒட்டியுள்ளனர். 

சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 11 ஆம் தேதி இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், திமுகவினர் ஆங்கங்கே போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இந்நிலையில், திமுக சார்பாக இதற்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் இதற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார். 

மாநகராட்சி இடங்களில் போஸ்டர் ஓட்ட கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் என்பவரும் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்தார். இதையடுத்து போஸ்டர்களை ஒட்டியது யார் என்று தேடி வந்த போலீசார், போஸ்டர் அச்சபடிக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து போஸ்டர் ஃபிலிப்ராஜ் என்பவரையும் கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளராக இருக்கும் சத்தியநாதன் என்பவர்தான் போஸ்டரை கொடுத்தார் என தெரியவர போலீசார் சத்தியநாதனை விசாரித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் தான் இதை செய்ய சொன்னதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து கிருஷ்ணகுமார் முருகனை தேடிவந்த போலீசார், நேற்று இரவு அவரை கைது செய்து, கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாஜகவினர் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக மிக கடுமையாக அரசியல் செய்து வரும் நிலையில், அண்ணாமலையின் உதவியாளரையே போலீஸ் கைது செய்துள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்