Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

எடப்பாடியாரை பாதம் தாங்கி, அடிமை என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? - ஆர்.பி.உதயகுமார் சாடல்

Chandrasekaran Updated:
எடப்பாடியாரை பாதம் தாங்கி, அடிமை என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? - ஆர்.பி.உதயகுமார் சாடல்Representative Image.

செந்தில் பாலாஜி மீது விசாரணை செய்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடை நடுக்கம், பதற்றம் அதிகரித்து உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியாரை பாதம் தாங்கி, அடிமை என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? - ஆர்.பி.உதயகுமார் சாடல்Representative Image

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். நாங்கள் பார்க்காத அடக்குமுறைகளா? எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள் என்று கூறி செந்தில் பாலாஜியின் அரசியலை பற்றி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் இருந்த போது சமகாலத்திலே நாங்கள் பயணித்தவர்கள் என்கிற அந்த அடிப்படையிலே செந்தில் பாலாஜி யுடைய அந்த அரசியல் சித்து விளையாட்டுகளை நாங்கள் ஆரம்ப காலகட்டத்திலே அறிந்தவர்கள். 

தொடர்ந்து நான் கழக மாணவரணி செயலாளராக பொறுப்பேற்ற போது செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தார். கரூர் மாவட்டத்தில் நுணுக்கமான அரசியல், நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் கையாண்டு கைதேர்ந்த அரசியல்வாதியாக  சித்து வேலை செய்தார்.

கரூர் மாவட்டத்தில் கே.சி.பி பழனிச்சாமியின் மணல் கொள்ளையை வைத்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஒரு விளம்பரம் தேடுறேன்  என்று ஒரு போராட்டம் செய்தார் இதில் அவரிடமே பணத்தை வாங்கி அவரை எதிர்த்து ஒரு போராட்டம் செய்தார். 

அதன் மூலம் பல பதவிகளை பெற்று  கரூர் மாவட்டத்தில் அசுர வளர்ச்சியாக வளந்தார். அம்மாவின் இல்லத்தில் உள்ள சுவர் அவரிடம் பேசும் கலையை கத்து வைத்திருப்பார்.சுவருக்கும் பயிற்சியும், பலனும் கொடுப்பதில் கைவந்த கலை. அவர் அமைச்சராக இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் பதவியை அம்மா ரத்து செய்தார். 

தற்போது செந்தில் பாலாஜியின் கைது மொழி போராட்டதை ஒப்பிட்டும், மிசா காலத்தில் நடைபெற்ற அடக்கு முறையிலே நடந்ததையும் ஒப்பீட்டு ஸ்டாலின் சொல்லி உள்ளார் .

இந்த விசாரணையும் மொழிப்போர்க்கு இணையாக ஒப்பிடுற அளவுக்கு செந்தில் பாலாஜி கருணாநிதியின் குடும்பத்திலும், திராவிட முன்னேற்ற கழகத்தில் மையப் புள்ளியாக தனது மதி நுட்பத்தில் சித்து வேலையை காண்பித்து விட்டார்.

செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அங்கே நான் வாங்கவில்லை எனது உதவியாளர்கள் தப்பு செய்துவிட்டார் என்று கூறியுள்ளார் .அப்படி என்றால் ஏன் உதவியாளரை பணி நீக்கம் செய்யவில்லை மேலும் செந்தில் பாலாஜி ஐடியில் இருந்து உதவியாளர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணி நியமன ஆணையை பட்டியலிட்டு அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் இரண்டு மாதத்தில் விசாரணை நடக்க வேண்டும் அப்படி இல்லை என்றால், சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை வைத்து நாங்கள் கண்காணிப்போம் என்று கூறியுள்ளனர்.

ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அதிமுகவில் குழப்பத்தை விளைவித்தார்.கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் முதலில் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறினார்  தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் தான் கொள்ளையடித்த பணத்தை வைத்து, கட்சி தலைமைக்கு எதிராக புதிய தலைமையை உருவாக்கி சதி திட்டம் தீட்டி ,அதில் டிடிவி தினகரனை முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று ஆசை காட்டி அதனை தொடர்ந்து, அவரை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.

திரும்புவும் செந்தில் பாலாஜி அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடியாரின் வாசலிலே தவமாய் தவமிருந்து, தூதுவிட்டார் செந்தில் பாலாஜியின் முழுமையான அரசியல் சித்து விளையாட்டை தெளிவாக தெரிந்த காரணத்தினாலே அன்றைக்கு எடப்பாடியார் சேர்க்க மறுத்துவிட்டார் என்றவுடன், ஸ்டாலிடம் அடைக்கலம் ஆகிவிட்டார் செந்தில் பாலாஜி.

புரட்சித்தலைவரை எதிர்த்தும், புரட்சித்தலைவி அம்மாவை  எதிர்த்து அரசியல் செய்த திராவிட முன்னேற்ற கழகம் ,இன்று செந்தில் பாலாஜியின் காலில் அடமானம் வைத்துள்ளது.

எடப்பாடியாரை பாதம் தாங்கி, அடிமை என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? - ஆர்.பி.உதயகுமார் சாடல்Representative Image

தமிழகத்தில் இதுவரை நடந்திராத வண்ணம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் அறைகளிலே, அமலாக்கத்துறை மத்திய விசாரணை உடைய ஏஜென்சி இதுவரை விசாரணை என்ற பெயரிலே உள்ளே நுழைந்து இருக்கிற வரலாறு உண்டா ?

இந்த தலை குனிவை ஏற்படுத்திய செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்குஎங்கள் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை பற்றி நீங்கள் தரக்குறைவாக பேசுவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

7 கோடி தமிழர்களுடைய எதிர்காலமாக உள்ள எடப்பாடியாரை பாதம் தாங்கி என்றும், அடிமை என்றும் இன்றைக்கு வாய்க்கு வந்தபடி நீங்கள் பேசி இருப்பது ஒரு முதலமைச்சருக்கு அழகா

எடப்பாடியார் இந்த தாய் தமிழ்நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக 11 அரசு மருத்துவமனை ஒரே ஆண்டில் பெற்றுக்கொடுத்த அரசியல் சாணக்கியர், ராஜதந்திரத்தினுடைய மொத்த அடையாளம், நிர்வாக திறனுடைய ஒட்டுமொத்த வெற்றியின் அடையாளம்.

இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசிடம் ஒரு சின்ன  ஒரு பங்களிப்பாக கேட்டு பெற்றது உண்டா? மத்திய அரசிடம்  விதண்டாவாதம் பேசியே தமிழத்துக்கு வந்த நிதியை  தடுத்து விட்டனர் இதற்காகவா உங்களிடம் மக்கள் அதிகாரத்தை கொடுத்தார்கள். 

நான்கரை ஆண்டு காலம் மத்திய அரசிடம் வலியுறுத்தி நடந்தாய் வாழி காவிரித் திட்டம், குண்டாறு திட்டம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சினைக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டார். காவிரி பிரச்சனைக்கு 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டுக் கொடுத்தார்.

நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்தார். 11 மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்ட பணிகள்மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், 56 லட்சம் விவசாயிகளுக்கு 6,000 உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தினார். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை வெற்றியாக நிறைவேற்றினார்.

மதுரையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரையில் 150 கோடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 300 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கட்டிடம், இப்படி ராஜதந்திரத்தோடு மத்திய அரசு திட்டங்களை எடப்பாடியார் கொண்டு வந்தார். இன்றைக்கு ஆனால் நீங்கள் மத்திய அரசிடம் வீணாக வாய்க்கு வந்த வசனங்களை பேசி, உங்கள் வீராப்பை காட்டுவதற்கு தமிழ்நாட்டினுடைய உரிமையல்லவா பறிப்போகிறது. 

ஒன்றிய அரசு என்று கருணாநிதி கண்டுபிடிக்காததை  புதிய அரசியல் விஞ்ஞானி  போல் மு.க ஸ்டாலின் கண்டுபிடித்து மத்திய அரசிடம் பிரச்சனை செய்து உரிமையை பறி கொடுத்தது தான் மிச்சம். 

தமிழகத்தில் ஒரு கோடி 10 லட்சம் இளைஞர்கள் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் கல்வியை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அதேபோல் வறுமை நீக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? ஆனால் அப்பா பெயரை பெயர் சூட்ட மட்டும் விழா நடத்திவருகிறீர்கள்.

செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதலமைச்சருக்கு இதயம் ஆடுகிறது. எடப்பாடியாரை பற்றி முதலமைச்சர் பேசுவது ஜனநாயகத்தின் அநாகரிமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.

இன்றைக்கு விவசாயிகளுக்காக  மத்திய அரசிடம் பல்வேறு  சலுகைகளை பெற்றுக் கொடுத்ததும், வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசிடம் பெற்றுக் கொடுத்தும் . விவசாயத்திற்காக மத்திய அரசினுடைய விருதுகள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பெற்றுக் கொடுத்த எடப்பாடியாரை பம்மாத்து என்று கூறுகிறீர்கள்.

பலகட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, எங்கள் கழக பொதுச் செயலாளர் மீது நரம்பு இல்லாத நாக்காக பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம். 

எடப்பாடியாரை பாதம் தாங்கி, அடிமை என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? - ஆர்.பி.உதயகுமார் சாடல்Representative Image

செந்தில் பாலாஜி  மீது விசாரணை செய்தால் உங்களுக்கு ஏன் தொடை நடுக்கம் ஏற்படுகிறது. ஏன் பதற்றம்  அதிகரித்து உள்ளது. செந்தில் பாலாஜி திமுகவின் கொள்கை வீரன் அல்ல ,இதே போல் சாதாரண தொண்டருக்கும் பேசுவீர்களா? செந்தில் பாலாஜியை ஏன் சொக்கத்தங்கம் போல் காட்டுகிறீர்கள் ?

இந்த பல கட்சி செந்தில் பாலாஜியை சொக்க தங்கம் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்களே அவர் என்ன தியாகம் செய்தார் ? அதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.  

ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து உள்ளார்கள் . 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார். எடப்பாடியார் மக்களுக்காக போராடும் உரிமை அவருக்கு உண்டு. மத்திய அரசு விசாரணை செய்தால் எங்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்?

இதே அம்மா ஆட்சியில் ஸ்டாலின் மீதுநில அபகரிப்பு வழக்கு இருக்கும் பொழுது உரிய விளக்கம் விசாரணை அளித்தீர்களே? அதை நீங்கள் செந்தில் பாலாஜிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆதலால் இனிமேல் கழக பொதுசெயலாளர் எடப்பாடியாரை நீங்கள் விமர்சித்தால் அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்கவேண்டியது இருக்கும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்